சொந்தமாக படம் தயாரித்து சூன்யம் வைத்துக்கொண்ட மூன்றெழுத்து நடிகர்.. கடன் பிரச்சனையில் தவிக்கிறாராம்!
சென்னை: சொந்த படம் தயாரித்ததோடு வம்பு வழக்குகளிலும் சிக்கிய மூன்றெழுத்து நடிகர் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்தவர் அந்த மூன்றெழுத்து நடிகர்.
வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்தார். இதனால் நடிகரின் கிராஃப்பும் கடகடவென உயர்ந்தது.

முதலாளியாக ஆசை
இதனை தொடர்ந்து சினிமா வாய்ப்புகளும் அதிகம் கிடைத்தது நடிகருக்கு. இந்த நிலையில் தான் படம் முதலாளியாக ஆசைப்பட்ட நடிகர் பட தயாரிப்பில் குதித்தார்.

கடன் நெருக்கடியில் நடிகர்
ஆனால் தான் தயாரித்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் நடிகர்.

வம்பு வழக்கு..
அதோடு படத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் சம்பள பாக்கி வைத்துள்ளார் நடிகர். கொடுக்க வேண்டிய பாக்கியை கேட்டவர்களிடமும் விதண்டாவாதம் பேசிய நடிகர் வம்பு வழக்குகளிலும் சிக்கினார்.

வாய்ப்பு இல்லாமல் தவிப்பு
இதனால் நடிகருடன் இணைந்து பணியாற்றவே தலை தெறித்து ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். இதன் காரணமாக புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல், தனக்கு தெரிந்த நண்பர்களின் படங்களில் கிடைக்கும் வாய்ப்பில் நடித்து வருகிறாராம் அந்த நடிகர்.

சினிமாவில் மீண்டும்..
அந்த படங்கள் ரிலீஸ் ஆகி விட்டப் பெயரை பிடித்தால் மட்டும்தான் நடிகரால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடியும் என்றும் இல்லாவிட்டால் ஊரிலேயே இருக்க வேண்டியதுதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.


Click it and Unblock the Notifications











