twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்னாம் தேதி வருதே... கருணை காட்டுவாங்களோ, இல்லையோ? சினிமாகாரங்க அந்தப் பயத்துல இருக்காங்களாமே!

    By
    |

    சென்னை: ஒன்றாம் தேதி நெருங்குவதால் சினிமாகாரர்கள் பீதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள், கோடம்பாக்கத்தில்.

    Recommended Video

    Allu Arjun Huge Contribution | FEFSI Workers

    அச்சுறுத்தும் கொரோனாவால், உறைந்து கிடக்கிறது உலகம். சீனாவின் வூஹானின் ஆரம்பித்த இந்த வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது.

    இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குக்கூ இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராஜு முருகன்!குக்கூ இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராஜு முருகன்!

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இளவரசர் சார்லஸைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா அச்சுறுத்தல், குதறிப் போட்டிருக்கிறது சினிமாவை. படப்பிடிப்புகள் ரத்து, தியேட்டர்கள் மூடல் என மொத்த சினிமா தொழிலும் முடங்கிக் கிடக்கிறது.

    உதவி இருக்கிறார்கள்

    உதவி இருக்கிறார்கள்

    சினிமாவின் தினக்கூலி தொழிலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களுக்கு நிதி திரட்டி இருக்கிறது ஃபெப்சி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அதற்கு பல லட்சங்களைக் கொடுத்து உதவி இருக்கிறார்கள். இதற்கிடையே, உதவி இயக்குனர்கள், ஒரு படம், இரண்டு படம் பண்ணிய இயக்குனர்களும் பெரும் கஷ்டத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஒன்றாம் தேதி

    ஒன்றாம் தேதி

    டோலிவுட்டில் டாப் ஹீரோக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிக் கொடுத்தி ருக்கிறார்கள் தெலங்கானா, ஆந்திர அரசுகளுக்கு. மலையாள நடிகர்களும் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளித்து இருக்கிறார்கள். இதற்கிடையே, ஒன்றாம் தேதி நெருங்குவதால் சினிமா தயாரிப்பாளர்கள் பீதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள், கோலிவுட்டில்.

    பைனான்ஸ்

    பைனான்ஸ்

    தமிழில், இரண்டு பேரைத் தவிர மற்ற தயாரிப்பாளர்கள் பைனான்ஸ் வாங்கியே,படம் தயாரிக்கிறார்கள். கோடிகளில் பணம் வாங்குவதால் வட்டியும் கோடிகளில் ஏறிக்கொண்டே இருக்கும். இப்போது சினிமா முடக்கப்பட்டிருப்பதால், வட்டியை எப்படி கொடுப்பது என்று தெரியாமல் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றனர். சினிமா தொழில் மீண்டும் சீராகும் வரை பைனான்ஸியர்கள், மனிதாபிமான அடிப்படையில் வட்டி வாங்காமல் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    வட்டி கேட்பார்களா?

    வட்டி கேட்பார்களா?

    ஏற்கனவே பல சலுகைகளை அரசு, மக்களுக்கு அறிவித்திருப்பதை போல, அவர்களும் வட்டியில் சலுகை காட்டுவார்கள் என்று நம்புகின்றனர். ஆனால், அவர்கள் அதை செயல்படுத்துவார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. வழக்கமாக ஒன்றாம் தேதி வட்டிக் கேட்பது பைனான்ஸியர்கள் வழக்கம். இப்போது ஒன்றாம் தேதி நெருங்குவதால், அவர்கள் வட்டி கேட்பார்களா? தள்ளுபடி செய்வார்களா? என்பது அதற்குப் பின்தான் தெரியவரும் என்கிறார்கள்.

    English summary
    gossip about tamil film producers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X