'எல்லாம் போச்சே..' டாப் ஹீரோவுடன் நடிக்க மறுத்த டான்ஸ் நடிகை.. ஓவர் கவலையில் உடல் இழைக்கிறாராமே?
சென்னை: அந்த டாப் ஹீரோ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததால், அந்த டான்ஸ் நடிகை இப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழில், அந்த ஹீரோயின் நடித்து ஒரே ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதுவும் தெலுங்கில் இருந்து இறக்குமதியான படம்.
அடுத்து அந்த கைதி நடிகருடன் நடித்திருக்கிறார், ஒரு படத்தில். இன்னும் அது ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் தமிழில் சில டாப் ஹீரோ படங்களுக்கு அவரை பேசி வருகின்றனர்.

ஹேப்பியோ ஹேப்பி
பிரகாச நடிகர் படத்தில் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள். தெலுங்கில் மொத்தம் நான்கு படத்தில்தான் நடித்திருக்கிறார், அந்த ஹீரோயின். நான்கும் ஹிட். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர், பாபு ஹீரோவுடன் நடித்து வெளியான படமும் ஹிட். இதனால் மேலும் சில டாப் ஹீரோ படங்களின் வாய்ப்பு வந்து குவிய, நடிகை ஹேப்பியோ ஹேப்பி.

டான்ஸ் நடிகை
அந்த, பாபு ஹீரோ படத்தில் நடிக்க, முதலில் அந்த பிரேம நடிகையைதான் கேட்டார்களாம். அந்த நடிகை டான்ஸிலும் கலக்குவார் என்பதால் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினார்களாம். இதையடுத்து அந்த டான்ஸ் நடிகையிடம் கேட்டிருக்கிறார்கள். 'கதை சொல்லுங்க பார்ப்போம்' என்றாராம் டான்ஸ்.

மறுத்து விட்டார்
பெரிய ஹீரோ படங்கள்ல ஹீரோயின்களுக்கு என்ன கேரக்டர் இருக்கும்? வழக்கமான கேரக்டர்தான் என்று சொல்ல, இருந்தாலும் சொல்லுங்களேன் என்று கூறியிருக்கிறார் நடிகை. சொன்னார் இயக்குனர். வழக்கமான லவ் டிராக்தான். இதுல கொஞ்சம் கூட நடிக்கிறதுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி மறுத்துவிட்டாராம் நடிகை.

ஹிட் நடிகை
பிறகுதான் லக்கி ஹீரோயினிடம் பேசியிருக்கிறார்கள். அவர் கதை கூட கேட்காமல் ஓகே சொல்லி விட்டு நடித்தார். படம் ஹிட். அவருக்கும் ஹிட் நடிகை என்று பெயர் கிடைக்க, வாய்ப்புகள் குவிகிறது. இந்நிலையில், இந்த படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்று நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறாராம், டான்ஸ் நடிகை.

அட்வைஸ்
எல்லாம் முடிஞ்ச பிறகு வருத்தப்பட்டு எதுக்கு? என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள் நடிகைக்கு வேண்டியவர்கள். இதில் நடித்திருந்தால், இன்னும் சில வாய்ப்புகள் கிடைத்திருக்கும், எல்லாம் போச்சே என்று இப்போதுவரை கவலையில் இருக்கிறாராம் நடிகை. அதை எப்படி போக்குவது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள் நடிகைக்கு வேண்டியவர்கள்.


Click it and Unblock the Notifications











