’என் லெவலே வேற..நான் இப்பவும் ஹீரோவாதான் நடிப்பேன்’ நிலைமை புரியாமல் அடம்பிடிக்கும் முன்னாள் ஹீரோ!
சென்னை: தான் இப்போதும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த முன்னாள் ஹீரோ.
முன்னாள் ஹீரோக்களில் ஒரு சிலர் மட்டுமே ஹீரோக்களாக தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
மற்றவர்கள், கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்கள். இதுதான் நடைமுறையும் கூட.

நிலையை உணர்ந்து
ஒரு கட்டத்துக்குப் பிறகு தங்களுக்கான மார்கெட் போனதும் கேரக்டர் ரோல்களில் நடிப்பது சகஜம்தான். இதற்கு பல முன்னாள் ஹீரோக்களை உதாரணமாகச் சொல்லலாம். நவசரச நாயகன், இளைய திலகம், புரட்சி நடிகர் போன்றவர்கள், ஒரு காலத்தில் தங்களுக்கென ஏராளமான ரசிகர்களை வைத்திருந்தார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு தங்கள் நிலையை உணர்ந்து குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கி விட்டனர்.

சூப்பர் ஸ்டார்
சிலர், வில்லன் ரோல்களிலும் நடித்து வருகிறார்கள். தமிழ் மட்டுமல்லாமல், மற்ற மொழி ஹீரோக்களும் அப்படித்தான். பாலிவுட்டின் ஒரு காலத்து சூப்பர் ஸ்டாரான அந்த உயர நடிகர் கூட, இப்போது தனக்குத் தோதான கதைகளில் நடித்து வருகிறார். தன் வயதுக்கேற்ற கேரக்டரில் நடிப்பதை விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

வெள்ளிவிழா நடிகர்
ஆனால், சீனியர் ஆன பிறகும், இப்போதும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கும் சிலர், வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். அப்படித்தான் இருக்கிறார் அந்த வெள்ளிவிழா நாயகன். ஒரு காலத்தில் அவர் நடித்த பல படங்கள் செம ஹிட். தொடர் ஹிட் கொடுத்த அந்த மைக் ஹீரோவுக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு படங்கள் இல்லை.

இயக்குனர்கள்
வாய்ப்புகள் இல்லாததால், அவரை சந்திக்கும் சில இயக்குனர்கள், கேரக்டர் ரோல்களிலும் வில்லன் வேடத்திலும் நடிக்க அழைத்தார்களாம். ஆனால், தனக்கு இப்போதும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று விடாப்பிடியாக இருக்கிறாராம். கதைச் சொல்லப் போன இயக்குனர்கள், சத்தம் போடாமல் திரும்பி விடுகிறார்களாம்.

ஹீரோவா நடிக்கலாம்
நடிகரைப் பார்க்கிற ரசிகர்கள் சிலர், 'சார் அப்படியே இருக்கீங்க சார். இப்பவும் நீங்க ஹீரோவா நடிக்கலாம்' என்று சொல்கிறார்களாம் அந்த ஹீரோவிடம். அதையே நம்பிக் கொண்டிருக்கிறார் அவர். ‘அந்த காலத்து ஆட்களுக்கு அவரை தெரியும். இப்ப உள்ள ரசிகர்களுக்கு இவரை யாருன்னு தெரியுமா? இன்னும் பழைய மிதப்புலயே இருக்காங்க' என்று வருத்தப்படுகிறார்கள், அவரிடம் கதை சொல்லப் போன இயக்குனர்கள்.


Click it and Unblock the Notifications











