விஸ்வரூபம் எடுக்கும் வில்லங்கப் பஞ்சாயத்து.. பீதியில், பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள்!
சென்னை: அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதை அடுத்து, பெரிய பாஸ் வீட்டில் பங்கேற்ற சில இளம் நடிகைகள் பீதியில் இருக்கிறார்களாம்.
சினிமாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது போதைப் பஞ்சாயத்து. மதுபாட்டில்களோடு முடிந்த போதை, தடை செய்யப்பட்ட மாத்திரைகளுக்குச் சென்றிருக்கிறது.
இது பாலிவுட்டில் பல வருடங்களாக நடப்பது என்று கூறப்பட்டாலும் இப்போது பீதியை கிளப்பி இருக்கிறது சில பகீர் தகவல்கள்.

மாத்திரை சப்ளை
கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரில் சிக்கினர் போதை மாத்திரைகளை விற்ற சிலர். அதில் ஒருவர் டிவி நடிகை. விசாரணையில் சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளுக்கு தாங்கள்தான் மாத்திரை சப்ளை என்று சொல்ல, விசாரணையை இறுக்கி இருக்கிறது போலீஸ். தங்கள் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி அவர்கள் ஒரு லிஸ்டை சொல்லி இருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள்
அந்த லிங்கை பிடித்தால், பல தொழிலதிபர்களில் இருந்து சில டாப் நடிகர், நடிகைகளும் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் ஓர் அரசு அதிகாரி சிக்க, அவரை வைத்து, அவருடைய நெருங்கிய தோழியான நடிகையை வளைத்தது போலீஸ். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்னொரு தொழிலபதிர், இன்னொரு நடிகையின் பெயரைச் சொல்ல, அவரும் சிக்கி இருக்கிறார்.

மற்ற மொழி நடிகைகள்
இதையடுத்து மேலும் சில டாப் நடிகைகள் இந்த வழக்கில் சிக்க இருக்கிறார்கள் என்கிறது சாண்டல்வுட். இதற்கிடையே, இரண்டு நடிகைகள் கன்னடத்திலும் ஒரு நடிகை மும்பையிலும் கைதானதால், இப்போது மற்ற மொழி நடிகைகளுக்கும் சிக்கல். கடவுளின் தேசத்திலும் இந்த போதை விவகாரம் சர்வசாதாரணமாக நடமாடுகிறதாம் கடந்த சில வருடங்களாக.

கடவுளின் தேசம்
பெங்களூரில் கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்ந்து, கடவுளின் தேசத்து நடிகர், நடிகைகள் தான் அடுத்த இலக்கு என்கிறார்கள். இதனால் அங்குள்ள சில சினிமா பிரபலங்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம். அங்கு விசாரணை நடக்கும்போதே, கோலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறதாம் போதைப் பொருள் தடுப்பு டீம்.

இளம் நடிகைகள்
இங்கு சில இளம் நடிகைகள் இந்த மாத்திரைப் பழக்கத்தில் மயங்கிக் கிடக்கிறார்களாம். நள்ளிரவு பார்ட்டிகளுக்கு சென்றுவிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை உள்பட, விரைவில் தொடங்க இருக்கும் அந்த பிரபலமான சேனல் நிகழ்ச்சியில், இதற்கு முன் கலந்துகொண்ட சில இளம் நடிகைகளும் இதன் பழக்கத்தில் இருக்கிறார்களாம். இதனால் அவர்கள் பீதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில்.


Click it and Unblock the Notifications