'யாரு வேணாலும் ஓகே, அந்த ஹீரோ மட்டும் வேண்டாம்...' இயக்குனரை தெறிக்கவிடும் தயாரிப்பாளர்கள்
சென்னை: அந்த ஹீரோவை வைத்து படம் தயாரிக்க விருப்பமில்லை என்று தயாரிப்பாளர்கள் சிலர் சொல்வதால் என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறாராம் அந்த இயக்குனர்.
அந்த உசர நடிகர் படத்தில் இருந்து, பட்ஜெட் பிரச்னை காரணமாக சமீபத்தில் விலகி இருந்தார், அந்த இயக்குனர்.
இயக்குனருக்கும் நடிகருக்கும் நடந்த ஏகப்பட்ட முட்டல் மோதலுக்குப் பின், கடைசியாக அந்த படத்தில் இருந்து விலகி இருந்தார், இயக்குனர்.

நம்பிக்கை இருக்கு
இதையடுத்து தனது அடுத்த படத்தை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறி இருந்தார், அந்த கண்ணாடி இயக்குனர். அதன்படி அதிரடியாக வேறு ஒரு ஹீரோவைத் தேடி கதைச் சொன்னார். ஹீரோவுக்கு கதை ஓகே ஆக, அடுத்தக் கட்டமாகத் தயாரிப்பாளரைத் தேடினார். அவரிடம் கதையை கேட்ட அந்த வெற்றிப் படத்தயாரிப்பாளர், கதை ஓகே. உங்க மேலயும் நம்பிக்கை இருக்கு... ஆனா?' என்று இழுத்திருக்கிறார்.

சிபாரிசு செய்தார்
'என்ன?' என்று அந்த இயக்குனர், தன் கண்ணாடியை தூக்கிவிட்டபடி கேட்க, வேற ஹீரோவை வச்சு இந்தப் படத்தை பண்ணலாமே என்றாராம். அதோடு சில ஹீரோக்களின் பெயரையும் சிபாரிசு செய்ததாகவும் தகவல். யோசிச்சுச் சொல்றேன் என்று கிளம்பிய அந்த இயக்கம், இன்ஷியலை நிறுவனத்தின் பெயராக வைத்திருக்கிறத் தயாரிப்பாளரிடம் கதைச் சொல்லி இருக்கிறார்.

அந்த ஹீரோதான்
அங்கும் இதே நிலைதானாம். கதையெல்லாம் ஓகே, அந்த ஹீரோ மேலதான் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேற ஹீரோ வேணா பார்க்கிறீங்களா?' என்று கேட்டுள்ளனர். அந்த ஹீரோவால் இதற்கு முன் சில தயாரிப்பாளர்கள் பட்டபாடு தெரிந்ததால்தான் அப்படிச் சொன்னார்களாம். இயக்குனர், 'இப்பலாம் அவர் அப்படியில்ல, திருந்திட்டேன்னு அவரே சொல்லி இருக்காரே' என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இப்படியொரு நிலைமை
'அப்ப பொறுப்பை நீங்க எடுத்துக்கறீங்களா?' என்று தயாரிப்பாளர் கேட்க, யோசிக்கிறேன் என்று திரும்பி விட்டாராம் இயக்குனர். அடுத்து வேறு சில தயாரிப்பாளரையும் அவர் பார்த்ததாகவும் அவர்களும் இதையே சொன்னதாகவும், பேசுகிறார்கள், கோலிவுட்டில். எப்படி இருந்த ஹீரோவுக்கு இப்படியொரு நிலைமை... இதுதான் சினிமா? என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











