அந்த ஹீரோ, ஹீரோயின் லவ், டப்புன்னு முறிஞ்சு பல வருஷமாச்சாமே... ஏன் லேட்டா பரவுதுன்னு தெரியலையாம்!
சென்னை: அந்த ஹீரோ, ஹீரோயின் லவ், எப்போதோ பிரேக்கப் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள், கோலிவுட்டில்.
காதலில் விழுந்த படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அந்த ஹீரோயின். அதற்கு முன் மற்ற மொழிகளில் நடித்திருந்தார்.
அந்த லவ் படம் நடிகைக்கு நல்ல பெயர் கொடுக்க, தமிழில் தொடர்ந்து நடித்தார். முதல் படத்தில் நடித்த ஹீரோவுடனேயே கிசுகிசுக்கப்பட்டார்.

கெஸ்ட் ரோல்
ஆனால், அந்த ஹீரோ அதை மறுத்தார். தொடர்ந்து மளமளவென்று நடித்து வந்தவருக்கு பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. வாய்ப்புகள் திடீரென குறையத் தொடங்கியது. சில வருடங்கள் சும்மா இருக்க வேண்டியதாயிற்று. பிறகு ஒரு சில பெரிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

ஆந்தாலஜி படம்
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஆந்தாலஜி படம் நடிகைக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதில் நடிகையின் ரோல் கவனிக்கப்பட, இப்போது மீண்டும் வாய்ப்புகள் வந்துள்ளனன. சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவர், அதில் நடித்து வருகிறார். இப்போது கொரோனா காரணமாக அந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது.

பழைய கதை
இதற்கிடையே நடிக்கும் ஹீரோ ஒருவருக்கும் காதல் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தன. இதுபற்றி விசாரித்தால், அது பழைய கதையாச்சே என்கிறார்கள். ஐந்தாறு வருடங்களுக்கு முன், வெண்ணையை திருடும் சாமியின் பெயரை கொண்ட நடிகருடன், இந்த ஹீரோயின் வன்மமான படத்தில் நடித்திருந்தார். அப்போதுதான் இருவருக்கும் காதல் நெருக்கம் அதிகமானது என்கிறார்கள்.

காதல் பிரேக்கப்
ஆனால், அந்த காதல் தொடரவில்லை. இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பே காதல் டொப்பென்று உடைந்துவிட்டதாம். எப்போதோ பிரேக்கப்பான காதல் விஷயத்தை இப்போது ஏன் கிளப்புகிறார்கள் என்று ஹீரோவும் ஹீரோயினும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











