ஹோம்லி லுக் ஹீரோயின் வீட்டில் அந்த மாதிரி பஞ்சாயத்தாம்.. அதிரடி முடிவுக்கு அதுதான் காரணமாமே!
சென்னை: திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த அந்த ஹோம்லி லுக் நடிகைக்கு வீட்டில் பிரச்னையாம்.
தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகை. முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.
ஆரம்பத்தில், சின்னத்திரையில் பங்கேற்றவருக்கு சினிமாவிலும் தடல்புடல் வரவேற்பு.

கண்களிரண்டும்
ஹோம்லி லுக்கில் அப்படியே அள்ளும் அந்த நடிகைக்கு கண்களிரண்டும் கட்டி வைக்கும் அழகு. தமிழ், தெலுங்கில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மலையாளத்துக்கும் சென்றார் . அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் நடித்த படங்கள் ஹிட்டானதால், நிறைய வாய்ப்புகள் வந்தன.இதற்கிடையே நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

காதலில் விழுந்தார்
பிறகு தங்களுக்குள் எதுவும் இல்லை என்றும் நாங்கள் நண்பர்கள்தான் என்றும் விளக்கம் அளித்தார். சினிமாவில் கிசுகிசுக்களுக்கு பஞ்சமா என்ன? இருந்தும் இந்தப் பிரச்னை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. இந்நிலையில்தான் நிஜமாகவே காதலில் விழுந்தார் நடிகை. சினிமாவுக்கு சம்மந்தமில்லாத அவர் காதலர், கடவுளின் தேசத்தைச் சேர்ந்தவர்.

திருமண வாழ்க்கை
பிறகு இரண்டு குடும்பமும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தன. வழக்கம்போல இவர்கள் திருமணமும் ஆர்ப்பாட்டமாக நடந்தது. ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். சில வருடங்கள் அழகாக, அமைதியாகச் சென்ற அவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென்று புயலாம். நடிகைக்கு நடிப்பு ஆசை. கணவர் வீட்டில் எதிர்ப்பு. இதனால் நடிகையும் கணவரும் பிரிந்துவிட்டதாகத் தகவல்.

வாய்ப்பு கிடைக்கவில்லை
அதை வெளிப்படையாக மறுக்காத நடிகை இப்போது தனியாகத்தான் இருக்கிறாராம். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த நடிகை, இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு வலைத்தொடர் வாய்ப்பு வந்திருக்கிறதாம் இப்போது.

யோசிக்க காரணம்
முதலில் அதில் நடிக்க யோசித்த நடிகை பிறகு ஓகே சொல்லிவிட்டாராம். முதலில் அவர் யோசிக்க காரணம், வலைத்தளத் தொடரில் வகை தொகையில்லாமல் அந்த மாதிரி காட்சிகள் இருக்கிறது என்பதுதானாம். இதுவரை ஹோம்லி லுக்கில் பார்த்த நடிகையை இதில், ஓவர் கிளாமராக பார்க்கலாம் என்கிறார்கள். விரைவில் தொடங்க இருக்கிறதாம் இதன் ஷூட்டிங்.


Click it and Unblock the Notifications











