இதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்!

By

சென்னை: மீண்டும் கிளம்பிய அந்த காதல் மேட்டரால், அந்த சீனியர் ஹீரோயின் அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்ட் கட்டி நடித்து வந்தவர், அந்த சீனியர் ஹீரோயின்.

ஹீரோயின்களில், அதிகமாகக் காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர் அவராகத்தான் இருப்பார்.

வெரி ஓல்டு ஸ்டோரி

வெரி ஓல்டு ஸ்டோரி

துணை நடிகையாக இருந்து ஹீரோயின் ஆன, அந்த நடிகைக்கு ஆரம்பத்தில் அந்த மாஸ் ஹீரோவுடன் வளர்ந்தது காதல். பிறகு அது கல்யாணம் வரை சென்று டமார் என்று முறிந்தது வெரி வெரி ஓல்டு ஸ்டோரி. அடுத்து அந்த வம்பு நடிகருடன் தீயாய் பரவிய காதலை, தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள் சிலர்.

முறிந்தது கல்யாணம்

முறிந்தது கல்யாணம்

பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார், நடிகை. அப்போது அவரை அந்த தொழிலதிபர் காதலிக்கத் தொடங்கினார். அவர் தயாரிப்பாளரும் கூட. காதல் மிகுதியில் தனி பிளைட் பிடித்து அவர்கள் ஜாலியாகச் சுற்றி வந்தனர். நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த நிலையில், என்ன நடந்ததோ, திடீரென்று முறிந்தது கல்யாணம்.

அசராத ஹீரோயின்

அசராத ஹீரோயின்

அடப்பாவமே, என சக ஹீரோயின்களே வருத்தப்பட்ட, அந்த ஹீரோயின் அசரவில்லை. நடிப்பைத் தொடர்ந்தார். பிறகு, பக்கத்து மாநில உயர ஹீரோவுடன் தொடர்ந்தது, லவ். அவர் பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், இந்த லவ் பரபரப்பாகப் பேசப்பட்டது, இரண்டு இன்டஸ்ட்ரியிலும்.

பொசுக்கென முறிவு

பொசுக்கென முறிவு

இருவரும் ஒன்றாகவே விழாக்களுக்கு செல்வது, ஜாலியாக சுற்றுவது என்று இருந்தார்கள். யார் கண்பட்டதோ தெரியவில்லை, பொசுக்கென்று முறிந்துவிட்டது காதல். இந்த காதல் முறிவு கடுமையான வலியை தந்ததாக, பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அந்த ஹீரோ.

தலையில் அடித்து

தலையில் அடித்து

இந்த நிலையில், பழைய கிசு கிசுவை தூசி தட்டி போட்டதுபோல, அந்த வம்பு நடிகருடன் நடிகைக்கு மீண்டும் காதல் என்றும் இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் சமீபத்தில் பரவியது செய்தி. இதைக் கேட்டு, அந்த ஹீரோயின் தலையில் அடித்துக் கொண்டாராம்.

ஒருபெக் எக்ஸ்ட்ரா

ஒருபெக் எக்ஸ்ட்ரா

எங்கிருந்துதான் இதையெல்லாம் கிளப்பறாங்களோ என்று நொந்து போன ஹீரோயின், இதுக்கு என்னதான் முடிவு என ஓவர் வருத்தத்தில், ஒரு பெக் ஒயினை எக்ஸ்ட்ராவாகக் குடித்தார் என்கிறார்கள். அதே நேரம் நடிகைக்கு தமிழில் அதிக பட வாய்ப்புகள் இல்லை. மலையாளத்தில் மட்டும்தான் நடித்து வருகிறார். அதுவும் தற்காலிகமாக நின்றிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X