இந்த இக்கட்டுலயும் ஷாக் கொடுத்த அந்த கோதுமை நிற நடிகை.. ஹீரோ அப்செட்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!
சென்னை: சினிமா இக்கட்டான சூழலில் இருக்கும் இந்த நேரத்தில் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறாராம் அந்த நடிகை.
லாக்டவுன் காரணமாக சினிமா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஷூட்டிங் இல்லை, தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
இதுபோன்ற காரணங்களால் சினிமா தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள் தவித்து வருகின்றனர்.

பெரிய ஹீரோக்கள்
பைனான்ஸ் கொடுத்தவர்கள் வட்டியை குறைக்க வேண்டும் என்றும் முன்னணி நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மூத்த தயாரிப்பாளர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து சில ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்தாலும் பெரிய ஹீரோக்கள் அதுபற்றி இன்னும் வாய் திறக்கவில்லை.

கோதுமை நிற நடிகை
முன்னணி நடிகைகளும் சம்பள குறைப்பு பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் அந்த கோதுமை நிற நடிகையை, தெலுங்கு படம் ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்ய பேசினார், அந்த தயாரிப்பாளர். அந்த மும்பை நடிகைக்கு தமிழைப் போலவே, தெலுங்கிலும் மார்கெட் இருக்கிறது. ஆனால், தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

நல்ல வரவேற்பு
தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் நடித்து வரும் அந்த நடிகைக்கு வேறு படங்கள் இல்லை. இதனால், புதிய படத்தில் நடிக்க சம்மதித்து விடுவார் என்று நினைத்தது படக்குழு. அந்த ஹீரோவுடன் நடிகை ஏற்கனவே நடித்திருப்பதாலும் இவர்களின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கு நல்ல வரவேற்பு என்பதாலும் நடிகையிடம் பேசியிருக்கிறார்கள்.

சம்பள விஷயம்
கதை ஏதும் கேட்காத நடிகை, நேரடியாகவே சம்பள விஷயத்துக்கு வந்துவிட்டாராம். இதற்கு முந்தைய படத்தில் ஒன்னே முக்கால் கோடி வாங்கி இருந்தாராம் நடிகை. அதைக் கொடுக்க தயாரிப்பாளர் ரெடியாக இருக்க, ஹீரோயினோ, 3 சி வேண்டும் என்றாராம். இதை எதிர்பார்க்காத தயாரிப்புக்கு அதிர்ச்சி. ஹீரோவும் அப்செட்.

வேறு ஹீரோயின்
ஏற்கனவே லாக்டவுனால் சினிமா சிக்கலில் இருக்க, அந்த ஹீரோயின் சம்பளத்தைக் குறைப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவர் அதிகமாக கேட்டது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதையடுத்து அவரை அப்படியே கழற்றி விட்டுவிட்டு, வேறு ஹீரோயினிடம் பேச முடிவெடுத்து இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











