இந்த பக்கம் அந்த ஹீரோ, அந்த பக்கம் இந்த ஹீரோ.. அருகில் இருந்தும் ரெண்டு பேரும் மூச்சே விடலையாமே?

By

சென்னை: அந்த இரண்டு ஹீரோக்களின் ஷூட்டிங்கும் அருகருகே நடந்தும் இருவரும் கண்டுகொள்ளாமல் இருந்ததை பரபரப்பாக பேசுகிறது படக்குழு.

சினிமாவில், ஹீரோயின்களை பற்றிதான் அப்படிச் சொல்வார்கள். இரண்டு ஹீரோயின்கள் நட்பாக இருப்பது அரிது என்று.

எதிரில் வந்தால் கூட மற்ற நடிகைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். போட்டி, பொறாமை அதிகமாக இருக்கும் என்பார்கள்.

சினிமா யதார்த்தம்

சினிமா யதார்த்தம்

இன்றைய காலகட்டத்தில் இதெல்லாம் மாறிவிட்டது. எந்த ஹீரோயினுக்கும் சினிமா லைஃப் கம்மிதான். நீண்ட நாள் தாக்குப்பிடித்தால் அது அவர்கள் லக் என்ற சினிமா யதார்த்தம் புரிந்துகொண்டு நட்பாக பழகுகிறார்கள். ஜாலியாக சுற்றுகிறார்கள். நடிப்பை புகழ்கிறார்கள்.

எல்லா வுட்டுக்கும்

எல்லா வுட்டுக்கும்

ஹீரோக்கள் சிலர் அதிக நட்போடு இருக்கிறார்கள். சும்மாவாவது மற்றவர்களை புகழ்வதையும் பாராட்டுவதையும் செய்கிறார்கள். இது ஆரோக்கியமானதாக இருப்பதால், தொடர்ந்து செய்கிறார்கள். கோலிவுட், பாலிவுட்டில் இருந்து எல்லா வுட்டுக்கும் பொருந்தும்.

அருகருகே படப்பிடிப்பு

அருகருகே படப்பிடிப்பு

ஆனால், சமீபத்தில் ஐதராபாத்தில் அருகருகே படப்பிடிப்பில் பங்கேற்ற இரண்டு ஹீரோக்கள், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் வந்ததை படக்குழுவினர் ஆச்சரியமாக பேசுகிறார்கள். இதுல என்ன ஈகோ என்றும் என்ன ஒற்றுமைடா சாமி என்றும் கிண்டலாக பேசி வருகின்றனர்.

பழங்கதை ஒன்று

பழங்கதை ஒன்று

இதற்கு உதாரணமாக, பழங்கதை ஒன்றையும் சொல்கிறார்கள். அதாவது, எம்.ஜி.ஆரும் சிவாஜியும் அருகருகே படப்பிடிப்பில் இருந்தால், கண்டிப்பாக சந்தித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது அண்ணன் தம்பி பாசம். இருவருக்கும் போட்டி இருந்தாலும் மனதுக்குள் ஆத்மார்த்த அன்பு ஓடிகொண்டிருக்கும்.

அதற்கு எக்ஸாம்பிள்

அதற்கு எக்ஸாம்பிள்

அவர்கள் இருவரும் செட்டில் சந்தித்தால், மொத்த படக்குழுவுக்கும் கொண்டாட்டமாக இருக்குமாம். ஆனால், இன்று இப்படியெல்லாம் அன்போடு சந்தித்து கொள்ளும் ஹீரோக்கள் குறைவு என்கிறார்கள். இதற்கு எக்ஸாம்பிளாகவே நடந்திருக்கிறது சமீபத்திய சம்பவம்.

ஐபிஎஸ் அதிகாரி

ஐபிஎஸ் அதிகாரி

அந்த டாப் ஹீரோ, ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் மாஸ் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது, கடந்த சில நாட்களாக. அங்கு அந்த உயர நடிகர் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்கும் நடந்தது சமீபத்தில். இருவர் நடிக்கும் படப்பிடிப்புகளுமே அடுத்தடுத்து நடந்தும் கண்டுகொள்ளவே இல்லையாம், இந்த ஹீரோக்கள்.

ஈகோவில் சென்றனர்

ஈகோவில் சென்றனர்

அவர் வந்து பார்க்கட்டும் என்று இவர், இவர் வந்து பார்க்கட்டுமே என்று அவரும் ஈகோவில் சென்றதால் சந்திக்கவே இல்லையாம். சென்னையில் ஷூட்டிங் நடந்தால் கூட பரவாயில்லை, வெளியூரில் அருகருகே படப்பிடிப்பு நடந்தும் இவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததை கிண்டலாக பேசி இருக்கிறார்கள், யூனிட்டில் உள்ளவர்கள்.

டிரெண்டாகி இருக்கும்

டிரெண்டாகி இருக்கும்

இரண்டு பேரும் சந்தித்து ஒரு போட்டோ வெளியிட்டிருந்தால், சோசியல் மீடியாவில் அது, நாள் முழுவதும் டிரெண்டாகி இருக்கும். அந்த வாய்ப்பையும் நழுவ விட்டுவிட்டார்களே என்கிறார்கள் சிலர். என்ன நட்போ, என்ன பிரச்னையோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X