நெசம்தானா? அந்தப் பிரபல நடிகையின் கட்டுப்பாட்டுக்குள் மொத்தமாக வந்துட்டாராமே அந்த இயல்பான ஹீரோ!

By

சென்னை: அந்த இயல்பான ஹீரோ, பிரபல நடிகை ஒருவர் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில்.

சினிமாவில் காதலுக்கும் காதல் கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஒன்றாக நடிக்கும் ஜோடிகளுக்குள் இது ஒரு பெரிய விஷயமும் இல்லை.

பல நடிகர், நடிகைகள் படங்களில் காதலித்துவிட்டு, நிஜத்திலும் அதைத் தொடர்ந்து இருக்கிறார்கள். பிறகு திருமணம் செய்திருக்கிறார்கள்.

லேட்டஸ்ட் காதலர்கள்

லேட்டஸ்ட் காதலர்கள்

சில ஹீரோக்கள் மனைவியை பிரிந்துவிட்டு காதல் நடிகையை இரண்டாவது திருமணம் கூட செய்திருக்கிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் பரவிக்கிடக்கின்றன, தமிழ் சினிமாவில். மற்ற மொழி சினிமாவிலும் இது சாதாரணமாக நடக்கிறது. காதல் புதிதில்லை என்றாலும் காதலிப்பவர்கள் புதிதுதானே. அந்த வகையில் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் காதலர்களாக அறியப்படுகிறார்கள், அந்த நடிகரும் நடிகையும்!

சினிமா வட்டாரத்தில்

சினிமா வட்டாரத்தில்

லாக்டவுனில் சினிமா முடங்கி கிடந்தாலும், அவர்களின் காதல் மட்டும் கன்னா பின்னாவென்று தொடர்கிறது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். அந்த ஹீரோயின் சில கிராமத்துப் படங்களில் நடித்து மிரட்டியிருக்கிறார். நடிப்பு ராட்சஷி என்று சொல்லப்படும் அளவுக்கு நடிப்பில் அசத்துவார். அந்த ஹீரோவும் அப்படித்தான். இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர்.

எதிர்பார்க்காத லைஃப்

எதிர்பார்க்காத லைஃப்

இயல்பாக நடிக்கும் அந்த ஹீரோ, பலவித போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவில் உயரத்துக்கு வந்தவர். 'இது நான் எதிர்பார்க்காத லைஃப்' என்று அடிக்கடி சொல்லும் ஹீரோ, ஏற்கனவே காதல் திருமணம் செய்தவர். வளர்ந்த குழந்தைகள் இருக்கின்றன. இருந்தாலும் நடிகையின் ஆழமான காதலில் அளவில்லாமல் விழுந்து கிடக்கிறாராம் இப்போது.

வீட்டில் பஞ்சாயத்து

வீட்டில் பஞ்சாயத்து

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்குச் செல்ல, நடிகருக்கு வேண்டிய இயக்குனர் ஒருவரும் ஹீரோ ஒருவரும் தடுத்ததாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே நடிகரின் வீட்டுக்குள்ளும் அரசல் புரசல் பஞ்சாயத்து, அப்படி இப்படி தலைதூக்கி இருக்கிறதாம். இந்நிலையில்தான் அந்த நடிகை, நடிகரை முழு கன்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

லாக்டவுனில் காதல்

லாக்டவுனில் காதல்

இப்போது நடிகை சொல்வதை மட்டும் அப்படியே கேட்கும் அந்த ஹீரோ, ஏற்கனவே மந்திரம் ஒன்றின் பெயரை கொண்ட ஹீரோயினுடன் காதல் வளர்த்தவர். அந்தக் காதல் வேகமாக முன்னேறிய நிலையில்தான் இந்த நடிகை என்ட்ரி கொடுத்தார். இதனால் அந்த லவ் முறிய, இவர்கள் காதல் வளர்ந்ததாம். இந்த லாக்டவுனில் அவர்கள் காதல் பயங்கரமாகத் தொடர்கிறது என்பது கோலிவுட் தகவல். என்னமோ போங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X