இப்படியொரு டாக் ஓடுது.. அந்த பிரபல நடிகர் திருமணம் திடுப்பென்று முறிய அதுதான் காரணமாமே!

By

சென்னை: அந்த நடிகரின் காதல் திருமணம் வரை செல்லாமல் முறிந்து போனதற்கு

அந்த ஹீரோ தமிழில் நடித்து வந்தாலும் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் அதே கெத்தோடு ரிலீஸ் ஆகிறது.

இன்டஸ்ட்ரி அறிந்தது

இன்டஸ்ட்ரி அறிந்தது

அதனால் இரண்டு மொழிகளும் மார்க்கெட் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார், அவர். நடிகை ஒருவரை, அவர் காதலித்து வந்த கதை இன்டஸ்ட்ரி அறிந்தது. அதை நட்பு என்று இருவரும் சொல்லி வந்தாலும் அது நட்பைத் தாண்டியது என்று பேசியது கோலிவுட். இருவரும் ஒன்றாகவே சுற்றி வந்தனர் எப்போதும்.

டொப்பென பிரிந்தனர்

டொப்பென பிரிந்தனர்

பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். பிறகு என்ன நடந்ததோ, இருவருக்கும் அப்படியொரு வெறுப்பு. டொப்பென்று பிரிந்து போனார்கள். அந்த பிரிவுக்குப் பலவித காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் தெரியவில்லை.

பொத்தென விழுந்தார்

பொத்தென விழுந்தார்


இதுபற்றி இன்டஸ்ட்ரியில் பரபரப்பாக பேசினார்கள் அப்போது. பிறகு அந்த ஹீரோ தனது படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில்தான், அந்த தெலுங்கு நடிகையின் காதலில் பொத்தென்று விழுந்தார், ஹீரோ. அந்த நடிகை கூட பரபரப்பாகப் பேசப்படும் ஹீரோயின் இல்லை.

நேரில் சந்திப்பு

நேரில் சந்திப்பு

இந்த திடீர் காதலை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு படத்தின் விழாவில் நடிகையை பார்த்ததுமே, அவர்தான் வருங்காலை மனைவி என்று முடிவு செய்த ஹீரோ, பிறகு அடுத்தடுத்த நடவடிக்கையில் இறங்கினார். முதலில் போனில் காதலை தொடங்கியவர், பிறகு நேரில் சந்திக்கத் தொடங்கினார்.

அவசரம் அவசரமாக

அவசரம் அவசரமாக

இதையடுத்து விஷயம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவர, திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். அடுத்த சில நாட்களிலேயே அவசரம் அவசரமாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.

பிரிவு உண்மைதான்

பிரிவு உண்மைதான்

அடுத்த சில மாதங்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில், திடீரென பிரிவு. இதுபற்றி ஹீரோ எதுவும் சொல்லவில்லை என்றாலும் அந்தப் பிரிவு உண்மைதான் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. அதற்கு காரணம் இதுதான் என்று சில கதை உலவுகிறது.

அப்படி இப்படி

அப்படி இப்படி

அதாவது, நிச்சயத்துக்குப் பிறகு நடிகரை தேடி அடிக்கடி கோலிவுட் வருவதை வழக்கமாக்கி இருந்தாராம், அந்த நடிகை. பிறகுதான் நடிகரின் நடவடிக்கை பற்றி அவருக்கு தெரிய வந்ததாம். அந்த நடிகர் சில நடிகைகளுடன் கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் வைத்திருந்தார் என்கிறார்கள். அதுதான் முறிவுக்கு காரணமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X