அப்படி விழுந்துட்டாராமே அந்த ஹீரோயின்? வீட்டில் நெருக்கடி.. வேகம் எடுக்கும் கல்யாண ஏற்பாடு!

By

சென்னை: அந்த இளம் நடிகைக்கும் நடிகருக்குமான நெருக்கம் பற்றி அரசல் புரசலாகப் பேசுகிறார்கள், இன்டஸ்ட்ரியில்.

சினிமாவில் கிசுகிசுக்களுக்குப் பஞ்சமில்லை. ஏதாவது ஒன்று எங்கிருந்தோ புறப்பட்டு வந்துகொண்டுதான் இருக்கிறது.

எரியாமல் புகையாது என்பதால், அந்த கிசுகிசுக்களை கண்டும் காணாமலும் இருந்து விடுகிறார்கள், சில சினிமாகாரர்கள்.

எட்டிப்பார்க்கும் மனநிலை

எட்டிப்பார்க்கும் மனநிலை

இதற்கு முன் இப்படி வந்த பல கிசுகிசுக்கள் உண்மையாகி இருப்பதால், சில சினிமாகாரர்கள் அதை அறிந்துகொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள். அடுத்த வீட்டில் எட்டிப்பார்க்கும் மனநிலைதான். அப்படி இன்டஸ்ட்ரியில் பேச்சாகக் கிடக்கும் லேட்டஸ்ட் கிசு கிசு இது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்கிற கதையாகத்தான் இருக்கிறது, அதைக் கேட்டதும்!

இளம் நடிகை

இளம் நடிகை

இது அந்த இளம் நடிகை பற்றிய அரசல் புரசல் தகவல். அப்பாவி மாதிரி இருக்கிற அந்த நடிகை, நடிப்பில் மிரட்டுகிறவர். அதற்காகவே அவரை அப்படி புகழ்ந்து தள்ளுகிறார்கள், ரசிகர்களும் சினிமாகாரர்களும். கோலிவுட் தவிர அருகில் இருக்கிற மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன. இந்த லாக்டவுனில் கூட சில வாய்ப்புகள் அவர் கால்ஷீட்டை நிரப்பி இருக்கிறது.

தொடர்கிறதாம் நட்பு

தொடர்கிறதாம் நட்பு

அந்த பிரபல நடிகருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார், அந்த ஹீரோயின். அப்போதிருந்தே நடிகைக்கும் நடிகருக்குமான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதாகச் சொல்கிறார்கள், இன்டஸ்ட்ரியில். அந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்தாலும் இன்னும் தொடர்கிறதாம் நட்பு. அடிக்கடி ரசிகசியமாகச் சந்தித்துக் கொள்கிறார்களாம், இருவரும்.

வீட்டில் ரணகளம்

வீட்டில் ரணகளம்

இந்த ரகசிய சந்திப்பு விவகாரம், கொஞ்சம் கொஞ்சமாக இன்டஸ்ட்ரியில் பரவி, இப்போது முழு பேச்சாகி இருக்கிறது. சிலர், விஷயம் வில்லங்கமாகி நடிகரின் வீட்டுக்குள் ரணகளத்தை உண்டாக்கி விட்டதாகவும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னும் வளர வேண்டிய நடிகை அதற்குள் இப்படி விழுந்துவிட்டாரே என்று வருத்தப்படுகிறார்கள்.

திருமண நெருக்கடி

திருமண நெருக்கடி

இதற்கிடையே நடிகையின் வீட்டில் திருமணத்துக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விட்டார்களாம். லாக்டவுன் முடிந்ததும் ஒப்பந்தமான படங்களை சீக்கிரமாக முடித்துவிட்டு, நடிகைக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்காக மாப்பிள்ளை பார்ப்பதை வேகப்படுத்தி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X