எல்லாம் காப்பி.. அவ்வளவு கோடி கொடுத்தும் ஒர்க் அவுட் ஆகலையாமே.. ஹீரோயினால் அப்செட்டான தயாரிப்பு!
சென்னை: அவ்வளவு கோடி கொடுத்தும் ஒர்க் அவுட் ஆகாததால், அந்த ஹீரோயின் மீது தயாரிப்பாளர் அப்செட்டில் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார், அந்த ஹீரோயின். இரண்டு மொழி படங்களிலும் சமமாக நடித்து வருகிறார்.
விவாகரத்தான தமிழ் ஹீரோவை காதலித்து வந்தார் ஆரம்பத்தில். திருமணம் வரை சென்ற நிலையில் திடீர் பிரச்னை.

தனி வீட்டில்
முறிந்தது காதல். அந்த ஹீரோவை விட்டுவிட்டு, தெலுங்கு படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோவை காதலிக்கத் தொடங்கினார். அந்த ஹீரோ பெரிய இடத்துப்பிள்ளை. சில வருடக் காதல் இருவருக்கும். பிறகு ஹீரோவின் அப்பா இவர்கள் காதலுக்கு ஓகே சொல்ல, திருமணம் முடிந்தது. இருவரும் தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

குறையவில்லை மவுசு
கல்யாணத்துக்குப் பிறகும் நடிகைக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் ஆஃபர்கள் வர, அந்தப் படத்தில் நடிக்கிறார் என்றும் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள். ஆனால், அடுத்தப் படம் பற்றி அவர் இன்னும் தகவல் சொல்லவில்லை.

ரிலீஸ் ஆகியுள்ளன
இதற்கிடையே, இந்த கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளங்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. பல தயாரிப்பாளர்கள் படங்களை பிரபலமான தளங்களுக்கு விற்று வருகின்றனர். சில படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இன்னும் சில அதில் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.

மொத்தம் பத்து
இதற்கிடையே பிரபல தயாரிப்பாளர் ஒருவர், தானும் ஒரு ஓடிடி தளத்தை தொடங்கினார். அவர் பிரபலமான தயாரிப்பாளர் என்பதால் அதற்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதில் ஸ்டார் டாக் ஷோ ஒன்றை, இந்த ஹீரோயினை வைத்து நடத்த முடிவு செய்தனர். மொத்தம் பத்து எபிசோட்.

அப்பட்டமான காப்பி
இதற்காக, அந்த ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஒன்றரை கோடி ரூபாயாம். ஆர்ப்பாட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு, அனைத்தும் பழைய நிகழ்ச்சிகளின் அப்பட்டமான காப்பி என்பதால் ரெஸ்பான்ஸ் இல்லையாம்.
மொத்த ஷோவும் ஏமாற்றம் அளிக்க, அவ்வளவு கோடி செலவழிச்சும் இப்படியாகிடுச்சே என வருத்தத்தில் இருக்கும் அந்த தயாரிப்பாளர், அந்த ஹீரோயின் மீதும் கடுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சியை ஜாலியாக நடித்துவார் என்று பார்த்தால், கேலியாக்கிவிட்டாரே என்கிற வருத்தம்தான் அவருக்காம்!


Click it and Unblock the Notifications











