Just In
- 4 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 5 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 6 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 8 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த பயம்.. காதலரைப் பார்க்க ஹீரோயினுக்கு தடை போட்ட படக்குழு.. வருத்தத்தில் நடிகை!
சென்னை: காதலரை சந்திக்க படக்குழு தடைபோட்டதால் பிரபல ஹீரோயின் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல மாஸ் ஹீரோயின் அவர். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வரும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
மூன்று மொழிகளுமே நடிகைக்கு வேற லெவல் வரவேற்பு. இப்போது தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சித்ரா சொகுசு பங்களா.. ஆடி கார் வாங்கியது எப்படி? பகீர் கிளப்பும் தோழி!

மாஸ் வரவேற்பு
சீனியர் ஹீரோயின் ஆகிவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மாஸ் வரவேற்பு. அதனால் வாய்ப்புகள் தேடி வந்து கதவைத் தட்டுகிறது நடிகைக்கு. இதன் காரணமாக சம்பளத்தை ஹீரோக்கள் வாங்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார், அவர். அதையும் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள் அவரை.

ஊரறிந்த கதை
அந்த நடிகை, அந்த இளம் இயக்குனரை காதலித்து வருவது ஊரறிந்த கதை. இருவரும் ஒன்றாகவே ஊர்களுக்குச் செல்வது, ஒன்றாகவே விழாக்களுக்கு செல்வது என செம ஜாலியாக இருக்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் வெளியில் சுற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும்.

பிறகு கல்யாணம்
இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பது ரசிகர்கள் கேள்வி. சில கமிட்மென்ட்களுக்கு பிறகு கல்யாணம்தான் என்று கூறியிருக்கிறார், அந்த காதலரான இயக்குனர். அவர் இயக்கும் படத்தில் நடிக்கும் காதலி நடிகை, இப்போது டாப் நடிகரின் படத்திலும் நடித்து வருகிறார்.

கட்டுப்பாடு விதிப்பு
இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பக்கத்து மாநிலத்தில் ஒரே இடத்தில் நடக்கின்றன. இந்தப் பக்கம் அந்த படம், அந்தப் பக்கம் இந்தப் படம் என நடந்தாலும் நடிகையால் காதலரை மீட் பண்ண முடியவில்லையாம். கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காக, டாப் நடிகர் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்கள்.

செல்லக் கட்டளை
ஷூட்டிங் முடியும் வரை செட்டை விட்டு யாரும் வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும் தங்கியிருக்கும் ஓட்டலில் வேறு யாரையும் பார்க்க வேண்டாம் என்று செல்லக் கட்டளை போட்டிருக்கிறார்களாம். அதை முறையாகக் கடைப்பிடிக்கும் நடிகை, காதலரைச் சந்திக்க முடியாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மற்றொரு ஹீரோயின்
இதனால், காதலர் இயக்குனர், தனது படத்தில் மற்றொரு ஹீரோயின் நடிக்கும் காட்சியை இப்போது படமாக்கி வருகிறாராம். அவராலும் அங்கு சென்று நடிகையை பார்க்க முடியாது என்பதால், அருகருகே இருந்தும் நடிகையை பார்க்க முடியாத கவலை இவருக்கும் இருக்கிறதாம்.