பெரிய ஹீரோ படங்கள்.. வாய்ப்பு பிடிப்பதில் அந்த ரெண்டு ஹீரோயினுக்கும் அப்படி போட்டியாம்ல!

By

சென்னை: பெரிய ஹீரோ படங்களில் வாய்ப்புப் பிடிப்பதில் அந்த இரண்டு ஹீரோயின்களுக்கும் அப்படி போட்டி என்கிறார்கள், சினிமா வட்டாரத்தில்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சில ஹீரோயின்கள் சினிமாவில் டாப்பில் இருப்பது உண்டு.

அவர்களுக்குள் அப்படி இப்படி போட்டி நிலவுவதும் சகஜம்தான். பொறாமை காரணமாக வாய்ப்புகளை தட்டி பறிப்பதும் உண்டு என்கிற பேச்சும் வந்து போகும்.

மாஸ் ஹீரோ ஜோடி

மாஸ் ஹீரோ ஜோடி

ஆனால், இப்போது தமிழில் அப்படியொரு அடுத்த கட்ட ஹீரோயின்கள் இல்லாததால், சீனியர் ஹீரோயின்களே அந்த இடத்திலும் இருக்கிறார்கள். சில நடிகைகள் நடிப்பு, திறமை இருந்தாலும் மாஸ் ஹீரோ ஜோடியாக நடிக்கும் அளவுக்கு பெரிதாக பேசப்படவில்லை என்கிறார்கள்.

மாஸ்டர் ஹீரோயின்

மாஸ்டர் ஹீரோயின்

அந்த விருது நடிகையை, அடுத்த டாப் ஹீரோயின் பட்டியலில் சேர்த்திருந்தார்கள். ஆனால், என்ன நடந்ததோ, அவர் அப்படியே தெலுங்குக்குச் சென்றுவிட்டார். தமிழில் டாப் ஹீரோக்கள் கண்டுகொள்ளவில்லை. அடுத்து வந்திருக்கிற மாஸ்டர் ஹீரோயினை நம்புகிறார்கள்.

ஓவர் போட்டி

ஓவர் போட்டி

மாஸ்டர் ரிலீஸுக்குப் பிறகுதான் அது தெரியும் என்கிற பேச்சும் உலவுகிறது. இதற்கிடையே சில ஹீரோயின், அந்த இடங்களைப் பிடிக்க ஓவர் போட்டியில் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மிட்டாய் கடை நடிகை திருமணமாகி செட்டிலாகிவிட, அவர் பெயரை கொண்டிருக்கிற இந்த புதிய நடிகை, அந்த வாய்ப்புகளுக்கு காய் நகர்த்தி வருகிறாராம்.

லக்கி ஹீரோயின்

லக்கி ஹீரோயின்

அதோடு கிருஷ்ணரின் பெயரை கொண்ட அந்த ராசியான நடிகையும் அதற்கான பகீரத பிரயத்தனங்களைச் செய்து வருவதாகச் சொல்கிறது கோடம்பாக்கம். இதற்கிடையே, அந்த லக்கி ஹீரோயின், தன் ரெண்டு கண்களையும் வாய்ப்புகளின் மீதே வைத்திருக்கிறார் என்கிறார்கள். அவர் கைதி நடிகருடன் நடித்துள்ள ஒரே படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தொப்புள் சர்ச்சை

தொப்புள் சர்ச்சை


தெலுங்கிலும் அவர்தான் டாப் இடத்தை குறி வைத்து சர்ரென முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சமமாக இருப்பது, சமீபத்தில் தொப்புள் குறித்து சர்ச்சை கருத்துச் சொன்ன அந்த பூஜை நடிகை. அவர்தான் அந்த பாகுபலி ஹீரோ உள்பட சில டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சரியான போட்டி

சரியான போட்டி

இதனால் இந்த இருவருக்கும்தான் இப்போது சபாஷ் சரியான போட்டி என்கிறார்கள். இருவருக்குமே டாப் ஹீரோக்களுடன் நடித்த முந்தைய படங்கள் ஹிட்டாகிய நிலையில் இருக்க, இருவருக்கும் டிமான்ட் இருக்கிறது அங்கே. இருந்தும் மொத்த வாய்ப்பையும் தங்கள் பைக்கட்டுக்குள் போட்டுவிட துடிக்கிறார்கள் என்கிறார்கள், சினிமாகாரர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X