படம் ஓடலைன்னாலும் அவ்ளோ கிடைக்குதாமே ஹீரோவுக்கு.. அந்த கிஃப்ட்டுக்கு பின்னே இப்படியொரு கதை!

By

சென்னை: அந்த பிரபல ஹீரோவுக்கு கொடுக்கப்பட்ட கிஃப்ட்டுக்கு பின் இப்படியொரு கதை இருக்கிறது என்கிறார்கள்.

அந்த ஹீரோவுக்கு ஏகப்பட்ட ரசிகர், ரசிகைகள். அதை சரியாகப் பயன்படுத்தாமல் கண்டபடி சுற்றித் திரிந்தார் ஒரு காலத்தில்.

படப்பிடிப்புக்குச் சரியாக வருவதில்லை, வந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று ஏகப்பட்ட புகார்கள், அப்போது

கவுன்சில் கதவு

கவுன்சில் கதவு

இதனால், சில தயாரிப்பாளர்கள் அடிக்கடி கவுன்சில் கதவைத் தட்டுவதும் பேச்சுவார்த்தை நடத்துவதும் அவர் தந்தை சமாதானத்தில் ஈடுபடுவதும் நடக்கும். இது தொடர் கதையானது. அவர் சரியாக ஷூட்டிங்கிற்கு வராததால், தங்களுக்கு இவ்வளவு கோடி நஷ்டம் என்று சில தயாரிப்பாளர்கள் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார்கள்.

மனம் மாறினார்

மனம் மாறினார்

இது பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்க, திடீரென்று மனம் மாறினார் ஹீரோ. என்ன மாயமோ என நினைக்கும் அளவுக்கு ஹீரோவின் நடவடிக்கையில் அதிரடி மாற்றம். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, உடல் எடையை அட்டகாசமாகக் குறைத்தார். சில படங்களில் கமிட் ஆனார்.

லேட்டாக வருவார்

லேட்டாக வருவார்

வழக்கமாக, ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்ற, அவர் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக, காலையிலேயே ஷாட்டுக்கு வரத் தொடங்கினார். ஹீரோவின் இந்த நம்ப முடியாத மாற்றம் படப்பிடிப்புக் குழுவினரையே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

சிறப்பு பரிசாக

சிறப்பு பரிசாக

இந்த நிலையில்தான் ஹீரோ வீட்டில் இருந்து அவருக்கு பல வசதிகளை கொண்ட அந்த சிற்றுந்தை சிறப்பு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே ஹீரோவுக்கு சில காஸ்ட்லி சொகுசு கார்கள் இருக்க, இந்த புதிய கிஃப்ட் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது, இன்டஸ்ட்ரியில்.

இப்படியொரு கதை

இப்படியொரு கதை

விசாரித்தால், அந்த கிஃப்டுக்கு பின்னே, இப்படியொரு கதை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஹீரோ, இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். அந்த ஹீரோ நடித்த இதற்கு முந்தைய படங்கள், தொடர்ந்து அடி மேல் அடி என்றாலும் சம்பளம் மட்டும் கூடிக் கொண்டே போயிருக்கிறதாம்.

பத்தும் பத்திரமாக

பத்தும் பத்திரமாக

அதாவது பத்து கோடி ரூபாய் பக்காவாக கிடைத்து விடுகிறது என்கிறார்கள். அடுத்தடுத்த பத்தும் தொடர்ந்து பத்திரமாக வீட்டுக்கு வரவேண்டும் என்றுதான் ஹீரோ ஆசைப்பட்ட இந்தப் பரிசைக் கொடுத்திருக்கிறார்களாம். இதுக்குப் பின்னால இப்படி ஒரு காரணமா? என்கிறார்கள், வியப்பாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X