ஓவர் ஸ்ட்ரெஸ்.. உச்சக்கட்ட வெறுப்பில் பிரபல ஹீரோயின்.. மனதை மாற்றும் சக தோழிகள்!

By

சென்னை: உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கிறாராம், அந்த பிரபல ஹீரோயின். அவரை எப்போதும் கூலாக வைத்துக்கொள்ள படாதபாடு படுகிறார்களாம் ஃபிரண்ட்ஸ்.

ஆரம்பத்தில் அப்படி இப்படி நடித்து வந்தார். அந்த ஹீரோயின். பிறகு ஒரே ஒரு படம் சூப்பர் ஹிட்டாகிவிட அவர் வாழ்க்கை மாறியது.

பிறகு கொஞ்சம் பெரிய படங்கள் கிடைத்தன. சம்பளத்தை அதிகரித்தார். மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் வர, நடிகையின் லைஃப் ஸ்டைல் மாறியது.

வெட்டி விடுவது

வெட்டி விடுவது

ஆரம்பத்தில் தனக்கு உதவிய, தன்னோட பழகிய அனைவரையும் மொத்தமாகக் கழற்றிவிட்டு, புதிய வாழ்க்கையில் ஐக்கியமானார். இதுதான் சினிமா வழக்கம். அதாவது வளர்ந்ததுமே ஆரம்பகால வாழ்க்கையை மறப்பதும் தன்னோடு பழகியவர்களையும் வெட்டி விடுவதும்.

மாடர்ன் வாழ்க்கை

மாடர்ன் வாழ்க்கை

பணமும் புகழும் சேர நட்பு வட்டமும் விரிவடைந்தது. பழக்க வழங்கங்கள் பக்காவாக விரிந்து கொண்டே செல்ல, நடிகையின் நடவடிக்கைகளில் மாற்றம். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தவர் பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்தார். மாடர்ன் வாழ்க்கையில் மயங்கினார், நடிகை.

ஹீரோயின் ஹேப்பி

ஹீரோயின் ஹேப்பி

சில ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை பிறகு அந்த டைரக்டரை காதலித்தார். அவரால் மாஸ் ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்க, ஹீரோயின் ஹேப்பி. பிறகு ஊர்கூடி திருமணம் செய்துகொண்டார். இதில் அவர் குடும்பத்துக்கு விருப்பம் இல்லை என்றாலும் டைரக்டர் விருப்பத்தால் சம்மதம் தெரிவித்தனர்.

பார்ட்டி பழக்கம்

பார்ட்டி பழக்கம்

நடிகைக்கு மீண்டும் நடிப்பில் இறங்க ஆசை. பழைய, பார்ட்டி பழக்கம் தொடர நட்பு மீண்டும் விரிந்தது. காதல் கணவரை விவாகரத்து செய்தார். எப்படி இருந்த நடிகை இப்படியாயிட்டாங்களே என்று சிலர் சொல்ல, நடிகைக்கு வேறொரு நபருடனும் பழக்கம் கிடைத்தது. அதுவும் பாதியிலேயே முடிந்துவிட, நடிகை அப்செட்.

பறிபோன வாய்ப்பு

பறிபோன வாய்ப்பு

இந்த கொரோனாவுக்கு முன் கிடைத்த இரண்டு பெரிய ஹீரோ பட வாய்ப்புகள், மற்ற ஹீரோயின்களால் பறிபோயின. இதனால் சொந்த வாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் இப்படி ஆயிடுச்சே என்ற கவலையில் எப்போதும் போதையில் இருக்கத் தொடங்கினார் நடிகை. அவரை நண்பர்கள் தேற்ற முயன்றனர்.

ஓவர் ஸ்ட்ரெஸ்

ஓவர் ஸ்ட்ரெஸ்

ஒரே இடத்தில் இருந்தால் அப்படித்தான் என்று பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று கூல் படுத்துகிறார்களாம் ஃபிரண்ட்ஸ். இருந்தாலும் ஓவர் ஸ்ட்ரெஸ்சில் அவ்வப்போது டென்ஷனாகி கத்தத் தொடங்கி விடுகிறாராம். அவர் நிலை கண்டு பரிதாபப்படுகிறார்களாம் தோழிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X