மட்டையாகும் வரை மது.. அந்த நடிகையின் ஒல்லி பெல்லி போட்டோவுக்கு பின் அப்படியொரு அச்சச்சோ கதை!
சென்னை: அந்த ஹீரோயின், உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள ஒல்லி போட்டோவுக்கு பின் அப்படி ஒரு அச்சச்சோ கதை இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.
Recommended Video
தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்களை இறக்குமதி செய்யும் கடவுளின் தேசம்தான் அந்த ஹீரோயினையும் இறக்குமதி செய்தது.
அவர் முதலில் அறிமுகமான படம் அவரை எங்கோ கொண்டு செல்ல, நடிகைக்கு எக்கச்சக்க வாய்ப்பு.

விட்டுவிடுமா சினிமா?
சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்ட அவர், முதலில் அடக்க ஒடுக்கமாகத் தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என இருந்தார். அப்படியெல்லாம் விட்டுவிடுமா என்ன, சினிமா? பழக்க வழக்கங்கள் பக்காவாக விரிந்து கொண்டே செல்ல, நடிகையின் நடவடிக்கைகளில்
வழக்கமாக நடைபெறும் மாற்றங்கள், மலர தொடங்கின.

எப்படி குடிக்கிறாங்களோ?
சில ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைக்கு பிறகுதான் அந்தப் பழக்கம் ஏற்பட்டிருக் கிறது. அந்த காரசாரமான ஹீரோவின் படத்தில் நெருக்கமாக நடித்த ஹீரோயினுக்கு மது பழக்கத்தை அறிமுகப்படுத்தியது அவர்தானாம். முதலில், 'ஐயே, ச்சை, இதை எல்லாம் எப்படித்தான் குடிக்கிறாங்களோ?' என்று வாயை பிதுக்கியவர், அதற்குள் வசமாக விழுந்தது அடுத்தடுத்து நடந்தக் கதை.

குண்டாகிட்டீங்க?
எப்போதாவது பார்ட்டிகளில் மட்டுமே குடிக்க ஆரம்பித்தவர், பிறகு எப்போதும் குடிக்க ஆரம்பித்தாராம். இதனால் நடிகையின் உடல் கண்டபடி பெருகிவிட்டது. இதன் காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மாறியது. சிலர் ஓபனாகவே என்ன இப்படி குண்டாகிட்டீங்க? என்று நேரடியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

மயக்கம் தீரவில்லை
நன்றாக பேசிய ஹீரோக்களே, அவர் போன்கால்களை அவாய்ட் பண்ண ஆரம்பித்தார்கள். இருந்தும் நடிகையின் போதை மயக்கம் தீரவில்லை. அவருக்கு வேண்டியவர்களுடன் அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நடிகைக்கு உண்மை புரிந்தாலும் போதையை விடமுடியவில்லையாம்.

தீவிர உடற்பயிற்சி
இதற்கிடையே ஒரு பக்கம் தீவிர உடற்பயிற்சியில் இறங்கினார். மறுபக்கம் போதையும் தொடர்ந்ததாம். போதையை விட்டுவிட்டு உடற்பயிற்சியை தொடர முடியவில்லையாம். இந்த நேரத்தில்தான் வந்தது கொரோனா. மொத்தமாக லாக்டவுன் ஆகிவிட, நடிகையின் நண்பர்கள் அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஒல்லியான வெள்ளி தேகம்
இதனால் இந்த லாக்டவுனை வசமாகப் பிடித்துக்கொண்டு, கடுமையான டயட் மற்றும் ஒர்க் அவுட்டில் இறங்கினாராம் நடிகை. கொஞ்சம் கொஞ்சமாகப் போதை மனதில் இருந்து மறைய, ஒல்லியானதாம், வெள்ளி தேகம். உடனே போட்டோஷூட் நடத்தி, அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டார் நடிகை. நடிகையின் நம்ப முடியாத ஒல்லி ஸ்டில்கள் அடுத்து சில வாய்ப்புகளைப் பெற்று தந்திருக்கிறது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











