Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அந்த இயக்குனருக்கும் ஹீரோயினுக்குமான நட்பு, அதுக்கும் மேலயாமே.. காதைக் கடிக்கும் கோலிவுட்!
சென்னை: அந்த பிரபல இயக்குனருக்கும் ஹீரோயினுக்குமான நட்பு, அடுத்தக் கட்டத்துக்குச் சென்றிருப்பதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில்.
கடவுளின் தேசத்தில் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார், அந்த இளம் நடிகை.
விஷால் பட பிரச்சனை.. தாமதமாக ரிலீஸான ஸ்ருதி ஹாசன் படம்.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஹீரோ!
அவரை தமிழுக்கு அழைத்து வந்து சின்ன கேரக்டரில் நடிக்க வைத்தார்கள், ஒரு படத்தில்.

திக்குமுக்காடி போனார்
பாலிவுட்டில் டாப் இயக்குனர் படத்திலும், நடித்திருக்கிறார் நடிகை. தமிழில் சில படங்களில் சின்ன கேரக்டர்களில் எட்டிப் பார்த்துப் போனவருக்கு, எதிர்பார்க்காமல் அடித்தது அப்படியோர் அதிர்ஷ்டம். அந்த முன்னணி நடிகர் படத்தில் அவர்தான் ஹீரோயின். இந்த டாப் வாய்ப்பால், திக்குமுக்காடி போனார் நடிகை.

பக்காவானத் திட்டம்
அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நடிகை, தன்னை அதை வைத்தே பக்காவாக புரமோட் பண்ண நினைத்தார். அதற்கான வேலைகளிலும் இறங்கினார். போட்டோ ஷூட், தடால், படால் பேட்டி என பக்கா திட்டம் வைத்திருந்தார். இதற்காக சில சீனியர்களிடம் ஐடியாவும் கேட்டிருந்தார்.

ஹீரோயின் சாயல்
ஆனால், கொரோனாவால் அவர் வளர்ச்சி திடுக்கென நின்றது. அசரவில்லை அவர், நிலைமை சரியான பிறகு கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வரலாம் என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் கவனம் செலுத்தினார். அதற்கு அந்த இயக்குனரை பயன்படுத்தலாம் என நினைத்தார்.

நட்பு வளர்த்தார்
நினைத்த மாதிரியே, இயக்குனருடன் சும்மா நட்பு வளர்த்தார். இளம் இயக்குனருமான அவருக்கு அடிக்கடி போனில் பேசி, நட்பை டெவலப் செய்தார். பின்னர் அந்த நட்பு அடுத்தக் கட்டத்துக்குச் சென்றது. இப்போது நடிகையின் போன் வரவில்லை என்றாலே படபடப்பாகி விடுகிறாராம் இயக்கம்.

அடுத்தக் கட்டம்
முதலில் ஹீரோயின் வம்படியாக, இயக்குனருக்கு போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்த நிலைமை போய், இயக்குனர் அவருக்கு அடிக்கடி போன் செய்யும் நிலைக்கு மாறிவிட்டதாம், நட்பு. இதனால், இவர்கள் நெருக்கம் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றிருப்பதாகச் சொல்கிறது கோலிவுட்.

காதைக் கடிக்கிறார்கள்
இந்த நட்பால், அந்த நடிகைக்கு மேலும் சில பெரிய பட வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். அந்த இயக்குனர் அடுத்து டாப் ஹீரோ ஒருவரிடன் படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படத்தில் கூட நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது எங்க போயி முடியும்னு தெரியலையே என காதைக் கடிக்கிறார்கள், சாலிக்கிராம ஸ்டூடியோக்களில்.