பரபரப்பாகும் படப்பிடிப்பு... அந்த ஹீரோவுக்கும் இந்தி ஹீரோயினுக்குமான நெருக்கம் 'அதுக்கும் மேல'யாமே!
சென்னை: அந்த இளம் ஹீரோவுக்கும் இந்தி ஹீரோயினுக்குமான நெருக்கம் அதுக்கும் மேல என்கிறார்கள்
தமிழில் டாப் ஹீரோவாக இருக்கும் அந்த ஹீரோவின் பெயரை முதல் பாதியில் கொண்ட தெலுங்கு ஹீரோ அவர்.
அந்த ரெட்டி படத்தில் நடித்தற்குப் பிறகு எக்கச்சக்க பிரபலமாகிவிட்ட ஹீரோ, இப்போது அக்கம் பக்கத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த இயக்குனர்
தமிழுக்கு ஏற்கனவே வந்துவிட்ட அந்த ஹீரோ இந்தியில் கால் வைக்கப் போகிறார். இந்தியிலும் ஏகப்பட்ட வரவேற்பு. இந்தப் படத்தின் மூலம் இந்திக்கு அவரை அழைத்தது, சேனல் ஒன்றில் காபி குடிக்கும் நிகழ்ச்சியை நடத்தும் அந்த இயக்குனர்தானாம். படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரும் நடிகையும் தயாரிக்கின்றனர். இந்தப் படம் மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதில் ஒன்று தமிழ்!

மயிலு மகள்
இந்தப் படத்தை இந்தியில் அந்த இந்தி இயக்குனர், இன்னொருவருடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக மயிலு மகள் உட்பட பல இளம் இந்தி நடிகைகளிடம் பேசி வந்தனர். மயிலு மகளை அந்த இந்தி இயக்குனரே சிபாரிசு செய்தாராம். ஆனால், கால்ஷீட் பிரச்னையை காரணம் காட்டி விலகி விட்டார் நடிகை.

முன்னாள் ஹீரோ
பிறகுதான் அந்த பாண்டே நடிகையை ஹீரோயின் ஆக்கினார்கள். முன்னாள் ஹீரோவின் மகளான அவர் நடித்த முந்தைய இந்தி படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. இது காதல் பிளஸ் மோதல் படம் என்பதால் படத்தில் கிளாமர் போர்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் மும்பையில் முடிவடைந்திருக்கிறது.

வேற லெவல்
இந்த படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் லீக் ஆயின. இந்தப் படத்தின் செட்டில் ஹீரோவும் ஹீரோயினும் காட்டும் நெருக்கம் பற்றி படக்குழுவினர் ரகசியமாக பேசிக்கொள்கின்றனர். அவர்கள் வழக்கமாக ஆரம்பத்தில் பழகினாலும் நாட்கள் செல்ல செல்ல அந்த நெருக்கம் வேற லெவலுக்குச் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











