அடப்பாவமே.. கொரோனா காரணமாக.. அந்த கவலையில் ஹீரோயின்கள்.. இதற்காகத்தான் இந்த கூத்துக்களா?
சென்னை: கொரோனாவால் நடிகைகள் அந்த கவலையில் இருப்பதால், இப்படியொரு முடிவில் இறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பலருடைய வாழ்க்கையை மொத்தமாகப் பதம் பார்த்துவிட்டது. வாழ்வாதாரத்தை இழந்து பலர் அல்லாடுகின்றனர்.
வாழ்க்கையை மீட்டெடுக்க பலர் போராடி வருகின்றனர். இதன் பாதிப்புக்கு சினிமா துறையை சேர்ந்தவர்களும் தப்பவில்லை.

தியேட்டர்கள்
பல தயாரிப்பாளர்கள் பணத்தை படங்களுக்குள் கொட்டிவிட்டு முழித்துக் கொண்டிருக்கின்றனர். தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள், கொரோனா பயமின்றி இப்போது படம் பார்க்க வருவார்களா என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கிறது. இதனால் குறைந்த லாபம் கிடைத்தால் கூட, ஒடிடி தளத்தில் படத்தை வெளியிடும் முயற்சியில் இருக்கின்றனர்.

கிளாமர், பிகினி
இது ஒருபுறம் இருக்க, நடிகைகளின் கவலை வேறாக இருக்கிறது. பெரும்பாலான நடிகைகள் தங்கள் சமூக வலைதளங்களில், புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கிளாமர், பிகினி, சேலை கட்டிய புகைப்படங்கள் என விதம் விதமான, அவர்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

போட்டோஷூட்
வட இந்திய நடிகைகள், இதில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நிலையில் தென்னிந்திய நடிகைகளும் இதுபோன்ற போட்டோஷூட்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். சின்ன நடிகைகளில் இருந்து டாப் ஹீரோயின்கள் வரை, இதை வேலையாகவே செய்து வருகின்றனர்.

லட்சக்கணக்கில்
இந்த போட்டோஷூட்டுக்காக அவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏன் இந்த திடீர் போட்டோஷூட் என்பது பற்றி விசாரித்தால், அதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள். கொரோனா காரணமாக அடுத்து புதிய படங்களின் ஷூட்டிங், மெதுமெதுவாகத்தான் ஆரம்பிக்க இருக்கின்றன.

வாய்ப்பு கிடைக்குமா
அதனால் முன்பு போல இப்போது அதிக வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. போட்டியும் அதிகம் என்கிற கவலை. அதற்காகத்தான் இப்படி போட்டோஷூட் நடத்தி, தங்கள் புகைப் படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டால், அது இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோக்கள்
கண்களில் பட்டு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிற ஆசைதானாம்.

போட்டோஷூட்
அப்படி சில நடிகைகளுக்கு இந்த போட்டோஷூட் காரணமாகவே வாய்ப்புகளும் கிடைத்திருக் கிறது என்கிறார்கள். அதனால்தான் இளம் ஹீரோயின்கள் முதல் சீனியர் நடிகைகள் வரை இப்படி திடீரென போட்டோஷூட்டுக்குள் விழுந்து கிடக்கிறார்கள் என்கிறார்கள்.
அவரவர்களுக்கு அவரவர் கவலை என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.


Click it and Unblock the Notifications











