twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதை விட்டு அங்க போயும் வாய்ப்பு கிடைக்கலையே.. அப்செட்டில் அந்த ஹோம்லி லுக் ஹீரோயின்!

    By
    |

    சென்னை: தமிழ் வேண்டாம் என்று தெலுங்குக்கு சென்ற பிரபல நடிகைக்கு அங்கும் வாய்ப்பில்லாததால், சம்பளத்தை குறைத்திருக்கிறாராம்.

    தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் மற்ற மொழிகளுக்கு ஹீரோயின்கள் செல்வது வழக்கமான ஒன்று.

    இதே போலதான் மற்ற மொழிகளிலும். அங்கு வாய்ப்பு இல்லை என்றால் இங்கு வருவார்கள்.

    என்ன ரியோவே இப்படி சொல்லிட்டாரு.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல.. கடைசியில் நொந்து போன நிஷா!என்ன ரியோவே இப்படி சொல்லிட்டாரு.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல.. கடைசியில் நொந்து போன நிஷா!

    மற்ற மொழிகளில்

    மற்ற மொழிகளில்

    ஹீரோக்களுக்கு இது ஒர்க் அவுட் ஆகாது என்றாலும் ஹீரோயின்களுக்கு, கல்லாகட்ட இது உதவுகிறது. தமிழில் முன்னணி ஹீரோயின்களாக உள்ள பெரும்பாலான நடிகைகள், மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். சில ஹீரோயின்களுக்கு மட்டும் அதிக வாய்ப்புகள் வருகின்றன. சிலருக்கு வருவதில்லை.

    பட்டையை கிளப்பும்

    பட்டையை கிளப்பும்

    இந்நிலையில் அந்த பிரபல நடிகை, தமிழை கண்டு கொள்ளாமல் தெலுங்குக்குச் சென்றார், சில வருடங்களுக்கு முன். ஆனால் அவர் தமிழில் இருந்து வளர்ந்த தெலுங்கு நடிகை. நடிப்பில் பட்டையை கிளப்பும் அந்த நடிகை, அந்த இளம் ஹீரோவை காதலித்தார்.

    சமையல் போட்டோ

    சமையல் போட்டோ

    இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் அப்போது கூறப்பட்டன. இருவரும் சமையல் செய்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நடிகை மீதான காதலை ஹீரோ, அரசல்புரசலாக பொதுவெளியில் ஒப்புக்கொண்ட நிலையில், நடிகை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

    என்ன நடந்ததோ

    என்ன நடந்ததோ

    'நாங்க ஃபிரண்ட்ஸ்தான்' என்று தொடர்ந்து கூறி வந்தார். பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் என்ன நடந்ததோ, யார் கண்பட்டதோ.. இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் நடிகைக்கு தெலுங்கில் சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

    ஹோம்லி லுக்

    ஹோம்லி லுக்

    அங்கு அரசியல்வாதி ஒருவரின் ஆதரவில் அந்த நடிகை இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி பரபரப்பு செய்திகளும் கசிந்தன. இந்நிலையில் வாய்ப்புகள் குறைந்ததால், உடலை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டார். ஹோம்லி லுக் ஹீரோயினான அவர், பின்னர் மாடர்ன் உடைகள் அணிந்தும் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டார்.

    கன்னட படம்

    கன்னட படம்

    ஆனாலும் தெலுங்கில் வாய்ப்புகள் வரவில்லையாம். இதனால் சம்பளத்தை குறைத்திருப்பதாக, தமிழில் சில மானேஜர்கள் மூலம் அவர் தூது அனுப்பினாராம். ஆனாலும் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் இங்கேயே கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று யோசிக்கும் நடிகை, இப்போது கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

    English summary
    That actress didn't get the opportunity in south so she decided to reduce her remuneration.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X