நெசம்தானா..? கொரோனா பாதித்தவரை சந்தித்தார்களாமே..? திடீர் பயத்தில் அந்த இசை, இயக்கம், ஹீரோ!

By

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கியதாகக் கூறப்படுபவரை சந்தித்த சினிமா பிரபலங்கள், இப்போது பயத்தில் இருக்கிறார்களாம்.

Recommended Video

வீட்டுக்குள் ஓடும் Simbhu | STR Quarantine | Lock Down Diaries

கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இதனால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தாலும், பாதிப்பு அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா படப்பிடிப்பு

சினிமா படப்பிடிப்பு

உலக அளவில் கொரோனா பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது. சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை என்றாலும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை

அரசு வகுத்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து இந்தப் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அந்த டாப் ஹீரோ நடித்துள்ள படத்தின் நிர்வாக தயாரிப்பாளருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு என தெரிய வந்திருக்கிறதாம். இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகச் சொல்கிறார்கள்.

இசை அமைப்பாளர்

இசை அமைப்பாளர்

இதற்கிடையே, கொரோனா பாதித்த அந்த எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசரை, அந்தப் பரபரப்பான மெல்லிய இசை அமைப்பாளர், சமீபத்தில் ஹீரோ ஒருவரை கடுமையாகச் சாடிய அந்த இயக்குனர், ஒர்க் அவுட்டில் அதிக கவனம் செலுத்தும், அந்த சினிமா குடும்பத்து ஹீரோ ஆகியோர் சமீபத்தில் சந்தித்து பேசியிருந்தார்களாம்.

தனிமைப்படுத்தி

தனிமைப்படுத்தி

எக்ஸ்கியூட்டிவ் புரொட்யூசருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்ததால் இவர்கள் மூன்றுபேரும் இப்போது பயத்தில் இருப்பதாகத் தகவல். மூன்று பேரும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் அவரைச் சந்தித்தோம் என்று ஃபீல் பண்ணுகிறார்களாம் இப்போது. கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது, இந்த தகவல். நெசமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X