ஏத்துக்குவரா, மாட்டாரா..? அப்படியொரு கவலையில் அந்த பிரபல நடிகைகள்.. இப்பவே தூது விடறாங்களாமே!
சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. ஆனால், ஏத்துக்குவாரா மாட்டாரா என்ற கவலையில் இருக்கிறார்கள் சில நடிகைகள்.
வாய்ப்பில்லாத சில ஹீரோயின்கள் எடுக்கும் அடுத்த முடிவு, அக்கா, அண்ணி கேரக்டர்களை.
அதில் அதிக வருமானம் கிடைக்காது என்றாலும் தொடர்ந்து சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஓகே சொல்லிவிடுவார்கள்.

கொடுமை மாமியார்
சிலர், சிரீயல் பக்கம் சென்று விடுவார்கள். கொடுமைக்கார மாமியார், அம்மா, சித்தி என முக்கியமான கேரக்டர்களில் வாழ முடிவெடுத்து விடுவார்கள். இன்னும் சிலர், சினிமாவை விட்டுவிட்டு பிசினஸில் இறங்குவார்கள். பல நடிகைகள் சினிமா வேண்டாம் என்று தொழிலதிபர் கணவருடன் செட்டிலாகி விடுகிறார்கள்.

நல்லா பார்த்துக்குங்க
இதில் எதிலும் சேராமல் இருக்கும் சில சீனியர் நடிகைகள், அரசியலுக்கு வருகிறார்கள். சில ஆலோசகர்களை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை மேடையில், மைக்கில், பேட்டியில் சொல்லிவிட்டு, 'நல்லா பார்த்துக்கோங்க, நாங்களும் அரசியல்வாதிதான்' என்கிற ரீதியில் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

அரசியல் கட்சி
அப்படி இறங்கும் சில நடிகைகளுக்குப் பொதுவாகத் தேர்தல் நேரத்தில் மட்டுமே பொதுக்கூட்ட வாய்ப்பு கிடைக்கும். மற்ற நேரங்களில் அவர்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியதுதான். இது ஒரு புறமிருக்க, இப்போது அந்த பிரபல நடிகர், அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

சரியாக இருக்கும்
அந்த அறிவிப்பை ஆசையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், அரசியல் ஆசையில் இருக்கும் சில நடிகைகள். அவர் கட்சியில் சேர அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்களாம். அவரை எப்படி பார்ப்பது, அதற்காக யாரை சந்திப்பது, எந்த ரூட் சரியாக இருக்கும் என சிலர் இப்போதே காரியத்தில் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

உரிய மரியாதை
அதில் தீவிரமாக இருப்பது, முன்னாள் ஹீரோயின்கள் இரண்டு பேர். அதில் ஒருவர் அடிக்கடி கருத்துச் சொல்பவர். மற்றொருவர் அந்த கிளாமர் நடிகை. வேறொரு கட்சியில் இருக்கும் அவருக்கு, தான் இருக்கும் கட்சியில் உரிய மரியாதையும் வருமானமும் கிடைக்க வில்லையாம்.

இணைப்பு, மாற்றங்கள்
அதனால் கட்சி மாற நினைத்து அவர் கட்சியில் சேர முடிவெடுத்து இருக்கிறார்களாம். சிலர் அந்த நடிகருக்கு ஆட்களைப் பிடித்து, இப்போதே தூது விட்டிருப்பதாகக் கூட பேச்சு இருக்கிறது. அவர் கட்சி ஆரம்பித்த பின்பு இந்த இணைப்புகள், மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள், சினிமாகாரர்கள்.


Click it and Unblock the Notifications











