முன்னாள் காதலருடன் அந்த படத்தில் நடிக்கக் கேட்ட இயக்கம்.. கடுப்பில் எரிந்து விழுந்த ஹீரோயின்!
சென்னை: முன்னாள் காதலர் என தெரியாமல் அந்த ஹீரோயினிடம் அதை இயக்குனர் கேட்டதால் கடுப்பாகி இருக்கிறார்.
சினிமாவில் காதலுக்கும் காதல் கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஒன்றாக நடிக்கும் ஜோடிகளுக்குள் இது இயல்புதான்.
சில நடிகர், நடிகைகள் படங்களில் காதலித்துவிட்டு, நிஜத்திலும் அதைத் தொடர்ந்து இருக்கிறார்கள்.

டோலிவுட் வரவேற்பு
சில ஹீரோக்கள் மனைவியை பிரிந்துவிட்டு காதல் நடிகையை திருமணம் கூட செய்திருக்கிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அப்படித்தான் அந்த ஹீரோயினும். தமிழில் நடிக்க ஆரம்பித்த அந்த ஹீரோயின், பிறகு டோலிவுட் சென்றார். தமிழைப் போலவே அங்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

மலர்ந்தது காதல்
தமிழிலும் தெலுங்கிலும் நடித்து வந்த ஹீரோ ஒருவருடன் சில படங்களில் நடிகை சேர்ந்து நடித்தார். அந்த ஹீரோ, ஏற்கனவே விவாகரத்து ஆனவர். இருந்தும் இருவருக்கும் காதல் மலர்ந்தது. சில மாதங்களாக தொடர்ந்த இந்த காதல் குறித்து இருவரும் ஏதும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

சிறப்பு பூஜை
ஆனால், விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஒன்றாகவே சென்றுவந்தனர். பின்னர் திருமணம் வரை சென்றனர். இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் நடிகையும் அவர் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். வேறு மதத்தைச் சேர்ந்த அந்த நடிகை இந்த பூஜையில் கலந்துகொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.

டப்பென முறிந்தது
இருவரும் குடும்பத்துடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் அப்போது வெளியாயின. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் என்ன நடந்ததோ, திடீரென இருவரும் பிரிந்தனர். கல்யாணம் வரை சென்ற காதல், டப்பென முறிந்துவிட்டது.

செட்டிலாகி விட்டார்
அடுத்து படங்களில் கவனம் செலுத்திய நடிகை, அந்த தெலுங்கு ஹீரோவை காதலித்தார். பிறகு அவரையே திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இன்னும் டாப் ஹீரோயினாக இருக்கும் அவர் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார்.

கால்ஷீட் கேட்டனர்
இதற்கிடையே, இரண்டு ஹீரோ கதை கொண்ட படத்தில், அந்த ஹீரோயினுடைய முன்னாள் காதலர் ஒரு ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் முதலில் அந்த ஹீரோயினிடம் கால்ஷீட் கேட்டனர். ஹீரோ யார் என்பதை சொல்லவில்லை.

பேச்சாக பேசுகிறார்கள்
அவர் தற்செயலாக, ஹீரோ யார் எனக் கேட்க, சொல்லியிருக்கிறார்கள், அந்த ஹீரோ பெயரை. அடுத்த நொடியே கடுப்பான அந்த ஹீரோயின், நோ சொல்லிவிட்டு எரிந்து விழுந்தாராம். அந்த இயக்குனருக்கு இவர்கள் காதல் பற்றியும் அது முறிந்த கதையும் தெரியுமா? அல்லது தெரிந்தேதான் அவர் நடிக்க கேட்டாரா? என்பது பற்றி பேச்சாகப் பேசுகிறார்கள்.

கொஞ்சம் நெகட்டிவ்
இப்போது அவர் நடிக்க இருந்த கேரக்டரில் வேறு ஹீரோயின் நடிக்கிறார். அவரும் தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ஹீரோயின்தான். படத்தின் கேரக்டர் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் கொண்டதாம். விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











