அவங்ககிட்ட இருந்து தப்பிச்சதாலதான் கேரியர் வேற லெவலுக்கு போச்சாமே... ஹீரோயின் சொன்ன பகீர் கதை!

By

சென்னை: அவங்ககிட்ட இருந்து தப்பியதால்தான் இப்போது படங்களில் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் அந்த ஹீரோயின்.

தனது முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டவர் அந்த நடிகை. அந்த விருது படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

டெல்லியில் பிறந்து வளர்ந்த அந்த நடிகை, அடுத்து தெலுங்கு சினிமாவுக்கும் சென்றார்.

 நட்பு வட்டம்

நட்பு வட்டம்

அப்போது நடிகைக்கு ஒரு நட்பு வட்டம் உருவானது. அதில், அந்த சர்ச்சை நடிகர், சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அவரது நண்பர் நடிகர், பிரபல தெலுங்கு ஹீரோ மகன், நம்ம ஒல்லி நடிகர் என பெரிய இடத்து தொடர்பு விரிய, தினமும் பார்ட்டி, ஜாலி கேலி என தொடர்ந்தது வாழ்க்கை. இதனால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை நடிகைக்கு. அப்போது நடிகைக்கு ஒரு நட்பு வட்டம் உருவானது. அதில், அந்த சர்ச்சை நடிகர், சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அவரது நண்பர் நடிகர், பிரபல தெலுங்கு ஹீரோ மகன், நம்ம ஒல்லி நடிகர் என பெரிய இடத்து தொடர்பு விரிய, தினமும் பார்ட்டி, ஜாலி கேலி என தொடர்ந்தது வாழ்க்கை. இதனால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை நடிகைக்கு.

பார்ட்டி பஞ்சாயத்து

பார்ட்டி பஞ்சாயத்து

தேர்வு செய்த கதைகளும் சரியாக அமையவில்லை. தெலுங்கிலும் இதே நிலைதான். இதற்கிடையே, அதிகாலை வரை நடந்த பார்ட்டி பஞ்சாயத்து ஒன்று, போலீஸ்வரை சென்று வந்தது அப்போது. பிறகுதான் நடிகை ஒரு முடிவெடுத்தாராம், இனி இந்த கும்பலுடன் இணையக் கூடாது என்று. இதையடுத்து அவர் தனித்திருக்க, ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் கிடைத்தது.

இந்தி படங்கள் ஹிட்

இந்தி படங்கள் ஹிட்

அது ஒர்க் அவுட் ஆக, பிறகு இந்தி வாய்ப்பு கிடைத்தது. அவர் நேரமோ, என்னமோ அவர் நடித்த இந்தி படங்கள் ஹிட்டாக, பிசியாகி விட்டார், அந்த வெள்ளாவி. இப்போது சில பயோபிக் படங்களில் நடித்து வருகிறார். அதோடு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் தேடி வருகிறதாம். இப்போது பார்ட்டி, பங்ஷனுக்கு போகக் கூட நேரமில்லை நடிகைக்கு.

முன்னாள் தோழி

முன்னாள் தோழி

தமிழ், தெலுங்கில் இருந்தும் வாய்ப்புகள் செல்ல, இப்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகையின் முன்னாள் தோழி ஒருவர் சமீபத்தில் அவரைச் சந்தித்தபோது, இந்த கதைகளை மனம்விட்டுச் சொல்லி இருக்கிறாராம், நடிகை. 'அந்த கும்பலோடு தொடர்ந்து கும்மாளம் அடித்திருந்தால், என் சினிமா கேரியர் எப்பவோ, சிதறி போயிருக்கும். நல்ல வேளை சிறந்த முடிவை எடுத்தேன்' என்று சொல்லி இருக்கிறார் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X