திடீர் அறிவிப்பு வரலாமாம்.. திருமண நெருக்கடியில் பிரபல டாப் ஹீரோயின்.. யாரந்த தொழிலதிபர் காதலர்?

By

சென்னை: பிரபல நடிகையின் வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்தி வருவதாக திடீர் டாக் பரபரப்பாகி இருக்கிறது இன்டஸ்ட்ரியில்.

அந்த ஹீரோயின் மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர். படிப்படியாக முன்னேறியவர்தான்.

ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்திருந்தாலும், தமிழ், தெலுங்கில் அதிக கவனம் செலுத்தினார்.

கைமேல் பலன்

கைமேல் பலன்

அவர் கவனத்துக்கு, கைமேல் பலன். வாய்ப்புகள் தொடர்ந்தன. தெலுங்கிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்க, சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார். அங்க எனக்கு இவ்வளவு கொடுக்காங்க என்று இங்கேயும் கேட்க, கொடுத்தார்கள், பதில் சொல்லாமல்.

சரியாக ஓடவில்லை

சரியாக ஓடவில்லை

சம்பள விஷயத்தில் கறாராக இருக்கும் அந்த நடிகைக்கு இப்போது தமிழில் அதிக வாய்ப்பில்லை. ஏற்கனவே நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. வெப் சீரிஸ் ஒன்றில் மட்டுமே நடித்துள்ளார். அடுத்து தெலுங்கில் சில படங்கள் இருக்கின்றன. கொரோனா இல்லை என்றால் அந்தப் படமும் எப்போதோ முடிந்திருக்கும்.

அப்படி இப்படி கேரக்டர்

அப்படி இப்படி கேரக்டர்

அதனால் அந்த ஒரே படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்கக் காத்திருக்கிறார் நடிகை. சமீபத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர், ஹிட்டான அந்த இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க கேட்டிருந்தார், நடிகையிடம். அது கொஞ்சம் அப்படி இப்படி கேரக்டர். சம்பளத்தை வழக்கமாக கேட்பதைவிட அதிகமாகவே கேட்க, அவர்களுக்கு அதிர்ச்சி.

தோழி நடிகை

தோழி நடிகை

பிறகு குறைக்கச் சொல்லி பேசினார்கள். மறுத்துவிட்டார் நடிகை. பின் கேட்டதை கொடுத்து விட்டார்களாம். இப்போது அதில் நடிக்க இருக்கிறார் அந்த நடிகை. இதற்கிடையில்தான் அவருடைய தோழி நடிகையின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது சமீபத்தில். ஹனிமூனுக்கு சென்றிருக்கிறார், அந்த நடிகை.

தொழிலதிபர் காதலர்

தொழிலதிபர் காதலர்

அவரும் மும்பை நடிகைதான். இதனால், நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற? என்று கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள், நடிகையிடம். இனியும் தள்ளிப் போட முடியாது என்பதால் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்கிறார்கள். திருமணம் செய்துகொண்ட நடிகையை போல, இந்த நடிகைக்கும் ஒரு தொழிலதிபர் காதலர் இருக்கிறாராம்.

சினிமா மொழி

சினிமா மொழி

அந்த காதலரைப் பற்றி விரைவில் அவர் அறிவிக்கலாம் என்கிறது, டோலிவுட். காதலும் கல்யாண மேட்டரும் சொல்லாமலே பரவும் என்பது சினிமா மொழி. இதற்கு பல நடிகர், நடிகைகளின் காதலும் கல்யாணம் உதாரணம். அதில் ஒருவராக இவரும் இருப்பார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X