இன்னும் குறையாத கோபம்.. அந்த விஷயத்துல பிரபல டாப் ஹீரோ ஹேப்பியா இல்லையாமே?
சென்னை: அந்த விஷயத்தில் டாப் ஹீரோ இன்னும் குறையாத கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்த டாப் ஹீரோ நடித்திருக்கும் படத்தின் ரிலீஸ் பற்றி அடிக்கடி வருகிறது, ஏதாவது ஒரு செய்தி.
சமீபத்தில் ஓடிடியில் வெளியாவதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

'மருத்துவ' இயக்குனர்
அதைத் தயாரிப்பு தரப்பு மறுத்திருந்தது. பொங்கலுக்கு தியேட்டரில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கான வேலைகளில் படக்குழு இருக்கிறது. இதற்கிடையே அடுத்த பட வேலைகளையும் தொடங்க இருக்கிறார், ஹீரோ. அதை இயக்க இருப்பது, அந்த 'மருத்துவ' பட இயக்குனர் என்பது உறுதியாகிவிட்டது.

திடீர் பரபரப்பு
இதற்கிடையே அவர் தந்தை கட்சி ஆரம்பிக்க இருந்த விஷயம் அரசியல் வட்டாரத்திலும் சினிமாவிலும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை அறிந்த ஹீரோ, அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று பரபரப்பு பதில் கொடுத்தார். அதில் தனது ரசிகர்கள் சேர வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

வெளியே தெரிந்தது
இந்த சம்பவம் மூலம் அப்பாவுக்கும் மகனுக்குமான மோதல், வெளியே தெரிய வந்தது. அப்பாவுக்கு அரசியல் ஆசை. மகன் அதற்கு சரியான நேரம் இது இல்லை என்கிறாராம். ஆனால், அதைக் கேட்காமல் எதையாவது பேசி அவர் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததுதான் மோதலுக்கு காரணம்.

பழைய கதை
இதனால் கடந்த சில வருடங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் மகன் தனியாகவும் அப்பா தனியாகவும் வசித்து வருவதும் தெரிய வந்தது. இந்நிலையில், ஹீரோவின் அம்மாவும், அப்பாவுக்கு எதிராக நின்றார். இதெல்லாம் பழைய கதை. இந்நிலையில், அப்பா மீதான கோபம் இன்னும் தீரவில்லையாம் ஹீரோவுக்கு.

சேர்த்து வைக்க
இருவருக்குமான பிரச்னைகளை தீர்த்து சேர்த்து வைக்க முயன்றார்களாம், சிலர். அதில் அவர் உறவினர்கள் சிலரும் இருந்தார்களாம். ஆனால், ஹீரோ அதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். என்ன சொன்னாலும் கேட்காதவரை, சந்திக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இதனால், சுமூக சூழல் தொடரவில்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











