பரவுகிறது அரசல் புரசல் டாக்.. இல்லை இல்லைன்னு மறுத்தாலும் அதுதான் அவங்களோட 'மாஸ்டர்' பிளானாமே!
சென்னை: ரிலீசுக்கு காத்திருக்கும் அந்த டாப் ஹீரோ படம் பற்றி இன்டஸ்ட்ரியில் அரசல் புரசலாக பரவுகிறது அப்படியொரு தகவல்.
Recommended Video
அந்த டாப் ஹீரோ, வாத்தியாராக நடித்திருக்கிறார், அடுத்த படத்தில். இளம் இயக்குனர் இயக்கி இருக்கிறார்.
படத்துக்கு கன்னாபின்னா எதிர்பார்ப்பு இருப்பதால், பிசினஸ் அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

படப்பிடிப்பு
ஆனால், கொரோனா வைரஸ், அந்த இனிப்பு எண்ணத்தில் உப்பை கொட்டி உர்ராக்கிவிட்டது. லாக்டவுனால் படத்தின் ரிலீஸ், குழப்ப குளறுபடியில் சிக்கிக்கொள்ள, தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். இந்நிலையில் அந்த டாப் ஹீரோவின் படத்துக்கு கொடுத்திருந்த அட்வான்சை சில மாதங்களுக்கு முன் திருப்பிக் கேட்கத் தொடங்கினார்கள், வினியோகஸ்தார்கள்.

இணை தயாரிப்பாளர்
இந்தப் படத்தில் ஜெயராம் ஹீரோ. இந்தப் பட ஹிட்டுக்கு பிறகு மோகன்லாலின் விஷ்மயாதும்பத்து என்ற படத்தில் நடித்தார். பாசில் இயக்கிய இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த வாய்ப்பு வந்தது நயன்தாராவுக்கு. மலையாளப் படங்களின் ஷூட்டிங் இரவு பகலாக நடக்கும் அப்போது. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முடித்து விடுவார்கள்.

நம்பிக்கை
இதற்கிடையே அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட பிரபல ஒடிடி தளத்திடம் பேசி வருகிறார்களாம், சில மாதங்களாக. முதலில் தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அமைதி காத்து வந்தார்களாம். இருந்தாலும் பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். அந்த சூரிய நடிகர் தனது படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்த பிறகு இவர்களுக்கு நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது.

பேச்சுவார்த்தை
அந்த ஹீரோ படத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது போல தங்களுக்கும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இவர்கள் கேட்கும் கோடிகளில் இருந்து சுமார் 20 கோடியை குறைத்துக் கேட்கிறதாம், அந்த பிரபலமான ஓடிடி நிறுவனம். அதன் காரணமாக பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது என்கிறது கோலிவுட்.

மாஸ்டர் பிளான்
'ஒடிடியில் எங்கள் படத்தை நிச்சயமாக வெளியிட மாட்டோம்' என்றும் அதுபற்றி ஏதாவது செய்தி வெளியானால், இல்லை இல்லை என்றும் படக்குழு பதறியடித்து மறுத்து வந்தாலும் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை பக்காவாக நடந்துகொண்டுதான் இருக்கிறதாம். இதுதான் மாஸ்டர் பிளான் என்கிறார்கள், சினிமா வட்டாரத்தில்.


Click it and Unblock the Notifications











