twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது சரிபட்டு வருமா..? பட ரிலீஸ் விஷயத்துல அப்படியொரு பிளான் வச்சிருக்காராமே அந்த டாப் ஹீரோ!

    By
    |

    சென்னை: பட ரிலீஸ் விஷயத்தில் டாப் ஹீரோ, அப்படியொரு பிளான் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

    Recommended Video

    BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

    அந்த டாப் ஹீரோ நடித்திருக்கும் மாஸ் படம் எப்போதோ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.

    கோடிகளை முடக்கி வைத்திருக்கும் அந்தப் படம், கொரோனாவால் பெட்டிக்குள் இருக்கிறது.

    பண நெருக்கடி

    பண நெருக்கடி

    படத்தை ஹீரோவின் உறவினர் தயாரித்திருந்தாலும் பிறகு அதன் இணை தயாரிப்பாளருக்கு விற்று விட்டனர். அவர், ஏற்கனவே மேலும் சில படங்களை தயாரித்து வருவதால், பண நெருக்கடிக்குள் சிக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்காகவே மேலும் சில பட அறிவிப்புகளை வெளியிட்டாராம்.

    தவிர்க்க முடியாதாம்

    தவிர்க்க முடியாதாம்

    எப்படி இருந்தாலும் நஷ்டம் பல கோடிகளைத் தாண்டும் என்பதைத் தவிர்க்க முடியாதாம். இதற்கிடையே அந்த மாஸ் ஹீரோ, இதற்காக சில கோடிகளை விட்டுக் கொடுத்திருப் பதாகவும் பேச்சு உலவுகிறது. அதாவது அந்த சில கோடி, 20 சி என்கிறார்கள். இருந்தும் நஷ்டம் வருமாம்.

    ஆணித்தர மறுப்பு

    ஆணித்தர மறுப்பு

    அந்தப் படத்தின் ரிலீஸ் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் ஓடிடியில் வெளியாவது உறுதி என்றும் கூறப்பட்டது. அதை படக்குழு ஆணித்தரமாக மறுத்திருந்தது. பொங்கலுக்கு தியேட்டரில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறியிருக்கிறார்கள்.

    இழுக்கும் மேஜிக்

    இழுக்கும் மேஜிக்

    இதற்கிடையே தியேட்டர்கள் திறக்கப்பட்டும் ரசிகர்கள் வருகை குறைவாக இருப்பதால் நஷ்டத்தில் தள்ளாடும் தியேட்டர் உரிமையாளர்கள், இந்தப் படத்தைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தியேட்டர்களுக்கு ரசிகர்களை இழுக்கும் மேஜிக், இந்தப் படத்துக்கு இருக்கிறது என்பது அவர்கள் நம்பிக்கை.

    வெயிட் பண்ணலாம்

    வெயிட் பண்ணலாம்

    இந்நிலையில், தியேட்டரில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற நிலை இருப்பதால், இன்னும் காத்திருக்கலாம் என நினைக்கிறாராம் ஹீரோ. அதாவது நூறு சகிதவித இருக்கைக்கு அனுமதி கிடைத்த பிறகு படத்தை ரிலீஸ் செய்யலாம் என நினைக்கிறார், அவர்.

    ஹீரோ விருப்பம்

    ஹீரோ விருப்பம்

    அதாவது ஏப்ரல் மாதத்துக்குள் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி கிடைக்கும் என்றும் அப்போது படத்தை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் எனவும் ஹீரோ விரும்புகிறாராம். ஆனால், ஏப்ரலுக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்றும் பேச்சு நிலவி வருகிறது.

    English summary
    That mass hero has a new plan to release of his film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X