கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்கிறாங்களாமே... அவர் படத்துக்கே இந்த நிலையா..? டாப் ஹீரோ ஷாக்!
சென்னை: தனது படத்துக்கு கொடுத்த அட்வான்சை, விநியோகஸ்தர்கள் திருப்பிக் கேட்பதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் அந்த டாப் ஹீரோ.
இப்படியொரு நிலை வரும் என்று அந்த டாப் ஹீரோ, ஜென்மத்திலும் நினைத்திருக்க மாட்டார்.
கொரோனா எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி போட்டு விட்டது. அந்த டாப் ஹீரோ படத்தின் மியூசிக் விழா சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு
படம், இந்த மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இந்தியாவுக்குள் நுழைந்து, ஷாக் கொடுத்திருக்கிறது. வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. சினிமா தியேட்டர்கள், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

அட்வான்ஸ்
பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இதற்கிடையே, அந்தப் படத்தின் தமிழ்நாடு ரைட்ஸை, சுமார் 80 கோடிக்கு விற்றிருந்தார்களாம். விநியோகஸ்தார்கள், அதற்கான அட்வான்ஸாக சில கோடிகளை தயாரிப்பாளரிடம் கொடுத்திருந்தனர். இப்போது நிலைமை மோசமாக இருப்பதால் இது சரியாக, இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறார்கள், விநியோகஸ்தர்கள்.

தியேட்டர்களுக்கு
நிலைமை சரியாகி, மீண்டும் தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகமே என்பது அவர்கள் எண்ணம். ஏனென்றால் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழி தேடுவார்களே தவிர, தியேட்டருக்கு உடனே திரும்ப மாட்டார்கள் என்றும் இதனால், எத்தனை கோடிக்கு படத்தை வாங்கினாலும் லாபம் கிடைக்காது என்றும் அவர்கள் நினைக்கிறார்களாம்.
Recommended Video

டாப் ஹீரோ யோசனை
இதனால் கொடுத்த அட்வான்ஸை அவசரமாகத் திருப்பிக் கேட்கிறார்களாம், முக்கியமான விநியோகஸ்தார்கள். இதுநாள் வரை அந்த டாப் ஹீரோ படத்துக்கு இப்படியொரு நிலைமை வந்ததில்லையாம். அந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் என்று ஹீரோவின் உறவினர் இருந்தாலும் ஹீரோதான் ஒரிஜினல் தயாரிப்பாளர் என்கிறார்கள். இந்த சிக்கலால், அந்த டாப் ஹீரோ யோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள், கோலிவுட்டில்!


Click it and Unblock the Notifications











