உச்சமும் உலகமும் இணையும் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலாம்..! தொடங்குவாங்களா, மாட்டாங்களா?
சென்னை: உச்ச நடிகரும் உலக நாயகனும் இணையும் படத்துக்கு புது சிக்கல் என்கிறார்கள் கோலிவுட்டில்.
பாயும் விலங்கின் படத்தை அடைமொழியாக வைத்திருக்கிற இயக்குனரின் படத்தில் இப்போது நடித்து வருகிறார் உச்ச நடிகர்.
இதன் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு, வெளி மாநிலத்தில் நடக்க வேண்டும். கொரோனா காரணமாக தடைபட்டிருக்கிறதாம்.

உலகமும் உச்சமும்
இந்நிலையில், உச்ச நடிகரும் உலக நாயகனும் ஒரு படத்தில் இணையப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இந்தப் படத்தின் தொடக்க விழா கூட இந்த மாதம் நடக்கும் என்று கூறப்பட்டது. படத்தை, தளபதியை இயக்கும் இயக்குனர் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

கெஸ்ட் ரோல்
அந்த இயக்குனர், உலக நாயகனுக்கு கதை சொன்னதாகவும் கதையை கேட்ட உலகம், அதை உச்சத்துக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டது. அந்தப் படத்தை உலகமே தயாரித்து கெஸ்ட் ரோலில் நடிக்க இருந்தாராம். பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைவதால் ரசிகர்கள் ஆர்வமாக இந்தப் படத்தை எதிர்பார்த்தனர்.

சரியாக தருவாரா?
ஆனால், உச்ச நடிகர் இதற்கு இன்னும் ஓகே சொல்லவில்லையாம். ஏனென்றால், உச்சத்தின் சம்பளம் நூறு கோடி என்கிறார்கள். அதை அந்த நண்பர் சரியாக தருவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறதாம். கூடவே, 'உங்களை வச்சு அவர் பல கோடி பிசினஸ் பண்ணிவிடுவார், அதுக்கு உங்களுக்கு வேண்டியவங்க படத்தில் நீங்க நடிக்கலாமே?' என்று வேண்டியவர்கள், சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

டேக் ஆஃப் ஆகாது
இதனால், குழப்பத்தில் இருக்கும் உச்ச நடிகரின் அந்த புராஜெக்ட் தள்ளிப் போவதாகச் சொல்கிறார்கள். அதோடு அரசியல் சூழ்நிலைகள் இப்போது பரபரப்பாக இருப்பதால், அதில் கவனம் செலுத்த இருக்கிறார்களாம் இருவரும். இந்த நிலையில் உச்சமும் உலகமும் இணைவதாகக் கூறப்பட்ட படம், இப்போது டேக் ஆஃப் ஆகாது என்பது கோலிவுட் டாக்!


Click it and Unblock the Notifications











