திடீர் காதல்.. விவாகரத்தான தயாரிப்பாளருடன் ஒன்றாக வசிக்கும் இளம் ஹீரோ.. விரைவில் கல்யாணமாமே!

By

சென்னை: விவாகரத்தான பெண் தயாரிப்பாளருடன் காதலில் விழுந்துள்ள அந்த இளம் ஹீரோ, அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சொல்கிறது கோலிவுட்.

சினிமாவில் வரும் காதலுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது நடிகர், நடிகைகளுக்கான காதலும்.

அதையும் தாண்டி பல வித்தியாசமான காதல்களுக்கும் பஞ்சமில்லை.

கடைத்தெரு நாயகி

கடைத்தெரு நாயகி

இரண்டெழுத்து பெயரை கொண்ட அந்த இளம் ஹீரோ, கடைத்தெரு நாயகியை கண்டபடி காதலித்து வந்தார், முதலில். கோலிவுட்டும் ரசிகர்களும் அறிந்த காதல் கதை அது. அது நட்பை தாண்டிய அன்பு என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார் ஹீரோ. ஒன்றாகவே வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

ஹீரோ அப்செட்

ஹீரோ அப்செட்

திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் திடீரென என்ன நடந்ததோ, தெரியவில்லை. அந்த ஹீரோயின் டப்பென பல்டியடித்துவிட்டார். எங்களுக்குள் வேற எதுவுமே இல்லை, நட்பு மட்டும்தான் என்று சொன்னதில் ஹீரோ அப்செட். இதை எதிர்பார்க்கவில்லை அந்த இளம் ஹீரோ. அவர் நண்பர்களுக்கும் கூட ஆச்சரியம்தான்.

என்ன காரணம்

என்ன காரணம்

அந்த ஹீரோயின், அப்படி திடீரென மாற என்ன காரணம் என்று தோண்டினார்கள். அவர் தெலுங்கில் அரசியல் பிரபலம் ஒருவரின் கன்ட்ரோலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் நடிகை அப்படியொரு முடிவை எடுத்தாராம். இதனால் காதல் தோல்வியில் இருந்த ஹீரோ, கவலையில் மூழ்கினார்.

போதையின் தயவு

போதையின் தயவு

காதலையும் காதலியையும் மறக்க முடியாத அந்த ஹீரோ, பிறகு போதையின் தயவை நாடினார். பிறகு ஒருவாறு சமாளித்து சகஜமானார். அவர் இரண்டு ஹீரோ கதை ஒன்றில் நடித்து வருகிறார் இப்போது. பழைய காதலை மறந்து இருந்தவருக்கு இங்குதான் ஆரம்பித்தது புது காதல்.

பெண் தயாரிப்பாளர்

பெண் தயாரிப்பாளர்

படத்தில் நாயகியோடு அல்ல. பெண் தயாரிப்பாளரோடு என்கிறார்கள். அவர், சென்னையில் சில பிசினஸ்களை நடத்தி வருகிறாராம். பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மகனை திருமணம் செய்திருந்தவர். சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பற்றிக் கொண்டது

பற்றிக் கொண்டது

அவர் திருமணம் செய்திருந்த தயாரிப்பாளர் மகன் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தவர். அந்தப் பெண் தயாரிப்பாளருடன் ஹீரோவுக்கு காதல் பற்றிக் கொண்டதாம். இருவரும் ஒன்றாகத்தான் படப்பிடிப்புக்கு வந்து செல்வதாக சொல்கிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் தகவல் வந்தது.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்நிலையில் அந்த தயாரிப்பாளரும் ஹீரோவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சொல்கிறார்கள். கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர்கள் காதலுக்கு அவருடைய பார்ட்டி நண்பர்கள் துணை நிற்பதாகவும் சொல்கிறது கோலிவுட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X