பழைய மேட்டரை இப்ப தூசு தட்டறாங்களாம்.. ரிலீஸ் நேரத்துல இப்படியொரு பஞ்சாயத்தாமே!

By

சென்னை: அந்த ஹீரோவின் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இப்படியொரு பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது.

அந்த ஹீரோ, சில வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சினிமாவின் பக்கம் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.

அவர் திடீரென சினிமாவுக்கு திருப்பி இருப்பது ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆச்சரியமாக

ஆச்சரியமாக

இதை அவருடைய பெற்றோர்களும் ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள். அவர், தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இன்னும் மூன்று படங்கள் லைனில் இருக்கிறது. அவர் நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங் கொரோனாவால் தடைபட்டது. பிறகு தொடங்கி நடந்து வந்தது.

அவசரம் அவசரமாக

அவசரம் அவசரமாக

இப்போது மழை காரணமாக நின்றிருக்கிறது, ஷூட்டிங். இதற்கிடையே சின்ன கேப்பில் ஒரு படத்தை அவசரம் அவசரமாக முடித்திருக்கிறார், ஹீரோ. படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த ஹீரோவின் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாவதும் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

பழைய பஞ்சாயத்து

பழைய பஞ்சாயத்து

படத்தைதான் சீக்கிரமாக முடித்திருக்கிறார்களே தவிர பட்ஜெட் கொஞ்சம் அதிகம்தான் என்கிறார்கள். சமீபத்தில் ஹீரோ நடித்து எந்தப் படமும் வரவில்லை என்றாலும் ஹீரோவுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளமாம். படத்தின் ரிலீஸே டெபிஸிட்தான் என்கிறார்கள். இதற்கிடையே பழைய பஞ்சாயத்துகள் கிளம்பி இருக்கிறது.

கவுன்சிலில் புகார்

கவுன்சிலில் புகார்

ஏற்கனவே அவரால் நஷ்டமடைந்த அந்த பிரபல தயாரிப்பாளர், தனக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்று அப்போது கவுன்சிலில் புகார் கொடுத்திருந்தார். பிறகு அடுத்தடுத்தப் பரபரப்பில் பிரச்னை தள்ளிக் கொண்டே போக, இந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில், அந்தப் புகாரை தூசி தட்டி எடுத்து, கவுன்சிலுக்கு சென்றிருக்கிறாராம்.

நடித்துக் கொடுப்பார்

நடித்துக் கொடுப்பார்

அதோடு, அந்த ஹீரோவுக்கு சில தயாரிப்பாளர்கள் அவ்வப்போது சில கோடிகளை அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு எப்போது படம் நடித்துக் கொடுப்பார்? இல்லை என்றால், பணத்தை எப்போது திருப்பி தருவார் என்பது பற்றி பேசி முடிவெடுக்க கவுன்சில் கதவைத் தட்டி இருக்கிறார்களாம்.

புதிய டென்ஷன்

புதிய டென்ஷன்

இந்தப் பிரச்னைகள் இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது என்கிறார்கள். இதைத் தாண்டி படம் ரிலீஸ்ஆகிவிடும் என்றாலும், ஹீரோவுக்கு இந்த நெருக்கடி புதிய டென்ஷனை கொடுத்திருக்கிறதாம். அதை எப்படி சமாளிக்கலாம், தீர்க்கலாம் என்பதை, கவுன்சிலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்ற, ஹீரோவின் அப்பா கவனித்து வருகிறார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X