ஆறடி நடிகரை விட்டு ஓட்டம் பிடிக்கும் ஃபிரன்ட்ஸ்.. தனி மரமாகிறாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அவராம்!

சென்னை: ஆறடி உயர நடிகரை விட்டு அவரது நண்பர்கள் ஒட்டம் பிடித்து வருகிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாராம்.

Recommended Video

Popular actress exit from cinema soon | Kolywood Actress

சினிமா பின்புலத்தை சேர்ந்தவர் இந்த வளர்ந்த நடிகர். இயக்குநராகும் ஆசையில் சினிமாவுக்குள் நுழைந்தார்.

முன்னணி நடிகரும் இயக்குநருமான ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ஆனால் அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பலருடன் கிசுகிசு

பலருடன் கிசுகிசு

முதல் படமே செம ஹிட்டான நிலையில் நடிகர் தொடர்ந்து அதே பணியை தொடங்கினார். பின்னர் அப்பா, அண்ணன் வழியில் தயாரிப்பிலும் இறங்கினார். தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். முன்னணி நடிகைகள் பலருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வந்தார். குறிப்பாக அடுத்தடுத்து இரண்டு நடிகைளுடன் காதல் என்றும் திருமணம் என்றும் பேசப்பட்டது.

இரண்டு நடிகைகள்

இரண்டு நடிகைகள்

ஆனால் அந்த இரண்டு நடிகைகளுமே இடையில் சினிமாக்களில் தலைக்காட்டாமல் இருந்தார்கள். ஒருவர் மீண்டும் நடிக்க தொடங்கி படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது. மற்றொரு நடிகை இப்போதுதான் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். அவரது படமும் விரைவில் ரிலீஸ் ஆகிவிடும் என தெரிகிறது.

அரசியல் கனவு

அரசியல் கனவு

இதற்கிடையில் நடிகர் அந்த துறை சார்ந்த அதிகாரப் பதவிகளை கைப்பற்றினார். தனக்கென ஒரு நட்பு வட்டாரத்தை வைத்துக்கொண்டு மாற்றம் மாற்றம் என்று கூறி வந்தார். அவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிகரை தூக்கி உச்சத்தில் வைத்தனர். ஆனால் அதன் பிறகு அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைத்தார் நடிகர்.

நடிகருக்கு வேட்டு

நடிகருக்கு வேட்டு

இதனால் அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்தார். நடித்த படங்களும் அந்தளவுக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் நடிகரின் நெருங்கிய நண்பர்கள் சிலர் அவரை விட்டு ஓட்டம் பிடிக்க தொடங்கி விட்டார்களாம். இதற்கெல்லாம் காரணம் நடிகருக்கு நெருக்கமான ஊர்க்கார நண்பராம். விஜயகாந்த் நடித்த படத்தின் பெயரை கொண்ட அந்த நடிகர், கூடவே இருந்து நடிகருக்கு வேட்டு வைக்கிறாராம்.

ஓவர் ஆட்டம்

ஓவர் ஆட்டம்

நடிகரும் நண்பரான அந்த நடிகரும் ஒரே ஊர்க்காரர்களாம். இதனால் அந்த நண்பருக்கு ரொம்பவே இடம் கொடுத்திருக்கிறாராம் நடிகர். கம்பெனி நிர்வாகத்தை கவனித்து வரும் அந்த நண்பர் நடிகர், வளர்ந்த நடிகரின் பட விஷயத்திலும் தலையிட்டு வருகிறாராம். இதனால் ஆடி வரும் நண்பர், மற்ற நண்பர்களை துண்டித்து விடுகிறாராம்.

நட்பை துண்டிக்காவிட்டால்

நட்பை துண்டிக்காவிட்டால்

அண்மையில் பிரபல இயக்குநர் வளர்ந்த நடிகரின் படத்தில் இருந்து விலகியதற்கு கூட அந்த நண்பர் நடிகர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த நண்பர் நடிகராலேயே, நடிகரை விட்டு ஓட்டம் பிடிக்கின்றனராம் மற்ற நண்பர்கள். அதோடு அந்த நடிகரின் நட்புக்கு நடிகர் கத்தரி போடாவிட்டால் அவர் தனிமரமாக இருக்க வேண்டும் புலம்பி வருகின்றனர் நெருங்கிய சில நண்பர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X