பெத்த தொகை கொடுக்கவிருந்த உச்ச நடிகை.. ஒரே போடாக போட்டு பாதியாக குறைத்த காதலர்.. கடுப்பில் கோலிவுட்!

சென்னை: உச்ச நடிகை கொரோனா நிதிக்காக கிள்ளிக் கொடுத்ததற்கு காரணம் அவரது காதலர்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

அரசுகளுக்கு நிவாரண நிதி அளிக்கும் திட்டமில்லை.. நடிகர் அதிரடி! இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருகிறது அந்த ஜோடி. ஏற்கனவே காதல் தோல்விகளால் நொந்து போயிருந்த நடிகையை மடக்கிய அந்த இளம் இயக்குநர் காதலியே கதி என இருந்து வருகிறார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றெரிச்சலை அவ்வப்போது கொட்டிக் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றும் இல்லை இனிமேல்தான் என்றும் பேச்சு இருந்து வருகிறது.

 வாங்கிக்கட்டினார்

வாங்கிக்கட்டினார்

ஆனால் இருவரும் ஒன்றாக தான் வசித்து வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த காதலரான இயக்குநர். அண்மையில் கூட கிரியேட்டிவிட்டி என நினைத்து காதலியின் பெயரை நம்பராக கூறி வாங்கிக்கட்டினார்.

உதவிக்கரம்

உதவிக்கரம்

தனது காதலரை விடவும் தாராள மனசு கொண்டவர் அந்த காதலி நடிகை. அந்த விஷயம் இதற்கு முன் தனது முன்னாள் காதலர்களுக்கு தான் கணக்கு வழக்கு இன்றி அள்ளிக்கொடுத்ததிலேயே தெரியும். இந்நிலையில் நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்புக்காக திரைத்துறை பிரபலங்கள் பலரும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

நிதியுதவி, அரிசி மூட்டை

நிதியுதவி, அரிசி மூட்டை

தமிழ் சினிமாவை பொருத்தவரை தினக்கூலியை நம்பியிருந்த ஃபெஃப்சி தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் நிதி மற்றும் அரிசி மூட்டைகள், மளிகைப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

குறைத்த காதலர்

குறைத்த காதலர்

அந்த வகையில் நம்பர் நடிகையும் பெருந்தொகையை கொடுக்க முன்வந்தாராம். ஆனால் கூடவே இருக்கும் காதலர், சினிமாவின் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த அப்பா மகன்களே அவ்வளவுதான் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நீ இவ்வளவு கொடு போதும் என்று நடிகை கொடுக்க இருந்த அமவுண்ட்டை பாதியாக குறைத்து விட்டாராம்.

பேச்சை தட்டாமல்

பேச்சை தட்டாமல்

காதலன் சொன்னால் சரியாகதான் இருக்கும் என்று நினைத்த நடிகை அவர் பேச்சை தட்டாமல் காதலர் சொன்னபடியே குறைத்து விட்டாராம். இந்த விஷயத்தை அறிந்த கோடம்பாக்கத்தினர் வாங்குவது மட்டும் கோடிகளில் கொடுப்பது ஒன்று இரண்டு லட்சங்களா என கொந்தளித்து இருக்கிறார்களாம்

ரொம்ப கெட்டி

ரொம்ப கெட்டி

முக்கியமாக தான்தான் கொடுக்கவில்லை என்றாலும் கொடுப்பவரையும் இப்படி தடுக்கிறாரே என காதலர் மீது செம காண்டில் இருக்கிறார்களாம். மேலும் காசு விஷயத்தில் காதலர் ரொம்ப கெட்டியாக இருப்பதாகவும் காசோடு சேர்ந்து காதலும் கெட்டியாக இருந்தால் சந்தோஷம் என்றும் முனுமுனுக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X