Just In
- 14 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 45 min ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- News
உமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுக்குதான் அதையதை அப்பப்போ பண்ணனும்.. நடிகைக்காக ஃபீல் பண்ணும் ஃபேன்ஸ்.. ச்சு கொட்டும் கோலிவுட்!
சென்னை: பிரபல நடிகையின் திருமண தகவலை கேட்ட திரைத்துறையினர் கவலையடைந்துள்ளனர்.
அழகுக்கு பஞ்சமில்லாதவர் அந்த நடிகை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பிரபலமானவர் அந்த நடிகை.
தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அளவிலும் அவருக்கு என பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. ராணியாக .நடித்த ஒரு படத்தின் இரண்டு பாகங்களும் ஹிட்டடிக்க உலகம் முழுக்கவே ரசிகர்கள் திரண்டனர் நடிகைக்கு.

கூடிய எடை..
வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் ராணி கதாப்பாத்திரம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் செல்வது இந்த நடிகையிடம்தான். யோகா டீச்சராக இருந்ததால் சிக்கென இருந்த நடிகை தனது படத்திற்காக உடல் எடையை கூட்டிய நடிகை அதன் பிறகு எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

தொழில் அதிபருடன்..
இதனால் உயரம், உடல் எடை என சரிசமமாக இருந்த நடிகை தற்போது உடல் எடை கூடிப்போய், கொஞ்சம் எக்குதப்பாகிவிட்டார். நடிகைக்கும் வயது கடந்து கொண்டே போவதால் வீட்டில் திருமணத்திற்கு முடிவு செய்தனர். இதனிடையே நடிகைக்கு தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயமாகி விட்டது அப்படி இப்படி என தகவல் பரவும்.

முன்னணி நடிகர்
ஆனால் அதெல்லாம் பொய் என அடுத்த சில நாட்களிலேயே வந்த வேகத்தில் பரவிய தகவல் புஸ்ஸாகிவிடும். இந்நிலையில் தான், நடிகைக்கு அக்கட தேசத்து முன்னணி நடிகருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து வெளிநாட்டில் வீடு வாங்கியிருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அங்கேதான் செட்டில் ஆகப் போகிறார்கள் என்றும் தகவல் பரவியது. ஆனால் அதுவும் புஸ்ஸாகிப் போனது.

ச்சுக்கொட்டும் கோலிவுட்
இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரருடன் என கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் அதுவும் பொய்யானது. இந்நிலையில் நடிகை அந்த நடிகை தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக செல்கிறாராம். இந்த தகவல் ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இதனைக் கேட்டு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் காரர்களும் ச்சுக்கொட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அதையதை அப்பப்போது
அம்மணி இப்படி ரெண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதற்கு பதில் கிசுகிசுக்கப்பட்ட அக்கட தேசத்து நடிகரையே திருமணம் செய்துகொள்ளலாம். அவர்களின் ஜோடி பொருத்தம் அட்டகாசமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் ரசிகப் பெருமக்கள். இன்னும் சிலர் அதற்குதான் அதை அதை அப்பப்போது செய்ய வேண்டும். பணம் பணம் என்று நடிகைகள் இருந்தால், எவ்வளவு அழகு இருந்தாலும் இப்படிதான் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.