அநியாயமாய் பறிபோன 3 உயிர்.. அதுக்கு அவரும்தான் காரணம்.. பிரமாண்டத்தின் மீது செம காண்டில் கோலிவுட்!

சென்னை: ஷுட்டிங் ஸ்பாட்டில் 3 பேர் பலியானதற்கு அவரும்தான் காரணம் என பிரபலம் ஒருவரின் மீது செம கோபத்தில் உள்ளனர் தமிழ் திரைத்துறையினர்.

பிரமாண்டத்துக்கு பெயர் போனவர் அந்த இயக்குநர். தான் எடுக்கும் படங்களில் எல்லாமே சிறந்ததாகவும் புதுமையானதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் அவர்.

அவரது இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ஒரு ஸ்பெஷாலிட்டியுடன் இருக்கும். அவரால் தமிழ் சினிமா பெரும் பெருமைகளை பெற்றிருக்கிறது.

பயங்கரம்

பயங்கரம்

அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என ஏங்குகின்றனர் இளம் ஹீரோக்களும் ஹீரோயின்களும். பெரும்பாலும் உச்ச நட்சத்திரங்களை வைத்த படம் எடுத்து வருகிறார் இயக்குநர். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தில்தான் யாரும் எதிர்பாராத அந்த பயங்கரம் அரங்கேறியது.

முக்கிய பிரபலம்

முக்கிய பிரபலம்

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அந்த பயங்கர விபத்தில் 3 பேர் துடிதுடித்து பலியாயினர். 10 பேர் கைகாலில் எழும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தமிழ் சினிமாவில் பெரும் ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்திற்கு காரணம் அவர்தான், இவர்தான் என பலரும் பலரையும் கைக்காட்ட மொத்த தமிழ் சினிமாவும் சேர்ந்த முக்கிய பிரபலத்தின் மீது பாய்ந்திருக்கிறது.

யோசிப்பது இல்லை

யோசிப்பது இல்லை

தன்னுடைய படங்கள் எல்லாம் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அந்த இயக்குநர், அதற்கு நிகரான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார். எல்லாவற்றிலும் ஹைடெக் டெக்னாலஜியை பயன்படுத்தி வரும் அவர், தனக்காக பணியாற்றும் தொழிலாளர்களை பற்றி கொஞ்சமும் யோசிப்பது இல்லை என புலம்பி தீர்த்திருக்கின்றனர்.

மீண்டும் பலி

மீண்டும் பலி

ஏற்கனவே ஒருமுறை முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படம் எடுத்த போதும் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டது. வித்தியாசமான சண்டைக்காட்சியின் போது, ஏற்பட்ட கோர விபத்தில் அப்பாவிகள் 6 பேர் பலியானார்கள். இந்நிலையில் தற்போதும் வித்தியாசம் விநோதம் என முயற்சித்தால் வாழ வேண்டிய வயதில் அப்பாவிகள் 3 பேர் பலியாகியுள்ளனர்.

பிரமாண்ட பசி

பிரமாண்ட பசி

அவரது பிரமாண்ட பசியே இந்த அப்பாவி உயிர்கள் பறிபோக காரணம் என்கிறது கோலிவுட். படத்தில் பிரமாண்டத்தை காட்ட முயலும் அவர், தன்னை நம்பி வரும் தொழிலாளர்கள் மீது கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். இனி வரும் காலங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே இதுபோன்ற பிரமாண்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் கோலிவுட் காரர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X