தொடர்ந்து விழும் துண்டு.. உச்ச நடிகர் படத்துல நம்பர் நடிகையை சேர்க்க இதான் காரணம்!

சென்னை: உச்ச நடிகர் படத்தில் நடிகைகளை அள்ளி சேர்க்க காரணம் என்ன என ஒரு தகவல் பரவி வருகிறது.

மற்ற மாநில நடிகர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறார் உச்ச நடிகர். அவரை நம்பி பணத்தை போட்டால் கோடி கோடியாக அள்ளலாம் என தயாரிப்பாளர்களும் நம்பிக்கையில் உள்ளனர்.

காரணம் அந்தளவுக்கு மாஸ் ரசிகர்களை வைத்திருக்கிறார் நடிகர். நடிகர் படத்தின் போஸ்டர், இசை, டீசர், ட்ரெயிலர் என என்ன வெளியானாலும் பீக்காகி விடுகிறது.

எல்லாமே டபுள்

எல்லாமே டபுள்

இந்நிலையில் முதல் முறையாக முன்னணி இயக்குநருடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் உச்ச நடிகர். இதன் முதற்கட்ட படிப்பு பக்கத்து மாநிலத்தில் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே படத்தில் நடிகர் பட்டாளம் ஏராளம் என பேச்சு உள்ளது. நகைச்சுவை நடிகர்கள், ஹீரோயின்ஸ் என எல்லாமே டபுள்.

நஷ்டம்

நஷ்டம்

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் நிறைவடைந்த நிலையில் படத்தில் நம்பர் நடிகையை சேர்த்திருக்கிறது படக்குழு. நம்பர் நடிகை சேர்ந்தது முதல் பல்வேறு தகவல்கள் றெக்கைக் கட்டி பறக்கிறது. இந்நிலையில் கடைசியாக வந்த இரண்டு படங்களால் நஷ்டம் நஷ்டம் என பேச்சு எழுந்து வருகிறது.

இதான் காரணம்

இதான் காரணம்

இந்த படத்தின் மூலம் எப்படியாவது கல்லா கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் தான் நடிகைளை இழுத்து பிடித்து தள்ளுகிறார்களாம். அதுவும் முன்னணி நடிகைகள், அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகைகளை சேர்க்கிறார்களாம். அதோடு பழையப்படி உச்ச நடிகரை குடும்ப பாங்கான கதையில் காட்டி கிடைத்த லட்டு போன்ற வாய்ப்பை அழகாய் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர்.

நடந்தால் சரி

நடந்தால் சரி

இதன் காரணமாகத்தான் நடிகைகள் பலரையும் கமிட் செய்திருக்கிறாராம் இயக்குநர். விரைவில் பிரபல நடிகர் ஒருவரும் இந்த படத்தில் இணைய இருக்கிறாராம். இந்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. எப்படியோ இயக்குநர் நினைத்தப்படி கல்லாக் கட்டினால் சரி என்கின்றனர் ரசிகப் பெருமக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X