நெசம்தானா? அங்க ஷூட்டிங் நடத்த கடும் எதிர்ப்பாமே! சத்தம் போடாமல் திரும்பிய அந்த ஹீரோ படக்குழு!

By

சென்னை: அந்த ஹீரோவின் ஷூட்டிங்கிற்கு, திடீர் எதிர்ப்பு கிளம்பியதாகச் சொல்கிறார்கள், கோலிவுட்டில்.

அந்த ஹீரோ, ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை அங்குலம் அங்குலமாக மெருகேற்றி வருகிறவர்.

நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருக்கும் அந்த நடிகர், கைவசம் நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார், இப்போது.

பழைய பட பெயர்

பழைய பட பெயர்

ஒரு படம் முடிந்ததும் அடுத்தப்படம் என வரிசையாக லைன் கட்டி செல்வது அவர் பாணி. அவர் சமீபத்தில் நடித்த முடித்த படம், பழைய படத்தின் டைட்டில் ஒன்றில் உருவாகிறது. அதில் பெரும்பாலான காட்சிகள் முடித்துவிட இன்னும் சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியாம். இந்தப் படத்தின் இயக்குனரை பாராட்டிய ஹீரோ, அவரது அடுத்தப் படத்தில் கூட நடிப்பார் என்கிறார்கள்.

கலவரப் பின்னணி

கலவரப் பின்னணி

இந்நிலையில், இந்தப் படத்தை முடித்ததும் அடுத்து வடமொழி படத்தில் நடிக்கச் சென்றிருக்க வேண்டும். கொரோனா மொத்தமாக அனைத்து திட்டத்தையும் முடக்கி வைத்துவிட்டது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் நடிக்கும் அந்தப் படத்தின் கதை, ஒரு கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ரயில்வே ஸ்டேஷன்

ரயில்வே ஸ்டேஷன்

இதை படத்தின் இயக்குனர் மறுத்திருந்தாலும் கதைக்குள் அதுபோன்ற விஷயங்கள் இருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ரயில்வே ஸ்டேஷனை கொண்ட ஒரு ஊரில், முக்கியமான காட்சியை எடுக்க விரும்பினாராம், அந்தப் படத்தின் இயக்குனர். அங்கு சில வருடங்களுக்கு முன் கலவரம் நடந்திருந்ததாம்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

அந்த ஊரிலேயே, கலவரம் நடந்த பகுதியிலேயே ஷூட்டிங்கை நடத்த முடிவு செய்திருந்தாராம். கொரோனாவுக்கு முன்பு அவர்கள், கொத்தாக ஸ்பாட்டுக்கு சென்று இறங்க, இதுபற்றி ஏற்கனவே மோப்பம் பிடித்த உள்ளூர்காரர்கள், ஷூட்டிங் நடத்த அனுமதி மறுத்து தகராறில் ஈடுபட்டார்களாம். இதனால், படக்குழு சத்தம் போடாமல் திரும்பிவிட்டது என்கிறார்கள். நெசமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X