அதெல்லாம் சரிதான், இதுக்கு என்ன பண்ணுவாங்க? புரமோஷனுக்கு வராத ஹீரோயின் இப்படி கேட்கிறாராமே?
சென்னை: 'எச்சரிக்கை இருக்கட்டும், எனக்கு பேலன்ஸ் இருக்கு, அதை வாங்கி தருவாங்களா?' என்று கேட்டிருக்கிறாராம் மூணுஷா நடிகை
நடிகை மூணுஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார் அந்த பாம்பு, ஏணி படத்தில். இரண்டு வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்திருக்கிறது.
ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷனுக்கு மூணுஷாவை அழைத்து இருக்கிறார்கள் தயாரிப்புத் தரப்பில்.

தட்டிக் கழித்தாராம்
பொலிட்டிக்கல் த்ரில்லர் படமான இதில் பெரிய ஹீரோக்கள் யாருமில்லை. சின்ன நடிகர்கள்தான் நடித்துள்ளனர். நடிகஇ மூணு ஷா, படத்தை விளம்பரப்படுத்தினால்தான் படம் மக்களிடம் ரீச் ஆகும் என்று நினைத்திருந்தார், தயாரிப்பு. அதனால் மூணுஷாவிடம் கூறி இருக்கிறார்கள். நடிகை பிசி பிசி என்று தட்டிக் கழித்திருக்கிறார்.

வெளிநாட்டுக்கு
அவர் இப்போது மலையாளத்திலும் ரத்ன இயக்குனர் படத்திலுமே நடித்து வருகிறார். வேறு படங்கள் இல்லை. என்றாலும் நடிகை வரமுடியாது என்பது வேறு வேறு வடிவங்களில் சொன்னாராம். இந்த நிலையில்தான் பாடல் வெளியீடு நடந்திருக்கிறது. நடிகை முந்தைய நாளே, அரபு நாடு ஒன்றுக்குச் சென்றுவிட்டாராம், அங்குள்ள விழா ஒன்றில் கலந்துகொள்ள.

இதையடுத்துதான்
'முந்தைய படங்களில், நடிகையுடன் பெரிய ஹீரோக்கள் நடித்ததால், அவர்களுடன் புரமோஷனில் கலந்துகொண்டார். இதில் அப்படி இல்லை என்பதால்தான் தவிர்க்கிறார் என்று நினைத்தாராம் தயாரிப்பு. இதுபற்றி தனது நெருங்கிய தயாரிப்பாளர்களிடம் வருத்தத்தோடு சொல்ல, இதையடுத்துதான் அந்த எச்சரிக்கையாம். ஆனால், நடிகை கலங்கவில்லை.

நான்கு லட்சம் பாக்கி
படத்துக்கு சம்பளமாக ரூ.75 லட்சம் பேசப்பட்டதாம். அதில் கொஞ்சம் கொஞ்சமாக இதுவரை, 74 லட்சத்தை வாங்கிவிட்டாராம் நடிகை. பாக்கி நான்கு லட்சம் ரூபாயை புரமோஷனில் கலந்து கொண்ட பின் தருகிறேன் என்று சொல்லி இருந்தாராம் தயாரிப்பு. இதனால், எச்சரிக்கை விடுக்கறதெல்லாம் இருக்கட்டும். அந்த பேலன்ஸி வாங்கி தருவாங்களா? என்று கேட்கிறாராம், நடிகையின் அம்மா.


Click it and Unblock the Notifications











