என்னதான் பிரச்சனை? அந்த 2 நடிகைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டில் முகத்தை கூட பார்த்துக் கொள்வதில்லையாம்!
சென்னை: டாப் நடிகரின் ரீமேக் படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகைகள் இருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் முகத்தை கூட பார்த்துக்கொள்வதில்லை என தகவல் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் அந்த இரண்டு நடிகைகளும். இருவருமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர்.

உச்ச நடிகர்களுடன்
இதில் ஒரு நடிகை மற்றொரு நடிகையை விட சினிமாவில் சீனியர். அவர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார். அனைத்து மொழிகளிலும் வயது வித்தயாசம் இன்றி உச்ச நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

பாலிவுட் வரை போய்
மற்றொரு நடிகை பாலிவுட் வரை போய் வாய்ப்பு கிடைக்காமல் திரும்பியவர். இவரும் உச்ச நடிகர்களுடன் எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்றாலும் ஏற்று நடித்து வருகின்றனர். சினிமா பின்னணியை கொண்ட அந்த நடிகை வந்த வேகத்தில் விருதுகளை வாங்கி குவித்து வருகிறார்.

அக்கட தேசத்து நடிகர்
இந்நிலையில் தமிழில் டாப் நடிகரின் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ஒன்று அக்கட தேசத்து மொழியில் ரீமேக் ஆகிறது. அதில் அக்கட தேசத்து மூத்த நடிகர் லீடிங் ரோலில் நடிக்கிறார். அந்தப் படத்தில் இரண்டு நடிகைகளும் கமிட் ஆகியுள்ளனர்.

கேமராவுக்கு முன்பு பர்ஃபாமன்ஸ்
படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்கும் இரண்டு நடிகைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவர் முகத்தை கூட ஒருவர் பார்த்துக் கொள்வது இல்லையாம். ஆக்ஷன் சொன்னதும் கேமராவுக்கு முன்பு பர்ஃபாமன்ஸ் செய்யும் நடிகைகள் டேக் ஓகே ஆனதும் ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று விடுகிறார்களாம்.

என்னதான் பிரச்சனை?
இதனை கவனித்த படக்குழு இரண்டு நடிகைகளுக்கும் இடையில் அப்படி என்னதான் பிரச்சனை என முனுமுனுத்து வருகிறார்களாம். இருவருக்கும் தொழிலுக்குள் ஏற்பட்ட போட்டி, ஒருவர் வாய்ப்பை மற்றொருவர் தட்டிப் பறித்ததது போன்று ஏதாவது பிரச்சனை இருந்திருக்கும், அதனை மனதில் வைத்துதான் இருவரும் இப்படி நடந்து கொள்கின்றனர் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications











