வரிசையா பிளாப்.. பேரை கேட்டாலே தெறித்து ஓடும் விநியோகஸ்தர்கள்.. படம் ரிலீஸாகாததற்கு காரணம் இதானாம்!

சென்னை: நடிகரின் பெயரைக் கேட்டதுமே விநியோகஸ்தர்கள் அவரின் படமே வேண்டாம் என தலை தெறிக்க ஓடுகிறார்களாம். அதனால்தான் படம் ரிலிஸ் ஆவதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடன நடிகரான அவருக்கு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் உண்டு. அதேபோல் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாதவர் அந்த நடிகர்.

தோளுக்கு உயர்ந்த பிள்ளைகள் இருந்த போதும் கட்டிய மனைவியை விவாகரத்து செய்து விட்டு முன்னணி நடிகையை வளைத்தார். இருவரின் காதலும் திருமணம் வரை சென்றது.

செம பிஸி

செம பிஸி

ஆனால் நடிகரால் தனது பழைய குடும்பத்தை மறக்க முடியாமல் போனதால் காதலியின் கோபத்திற்கு ஆளானார் நடிகர். இதனால் கிடைத்தவரை லாபம் என நடிகையோடு ஊர் சுற்றியதோடு பல கோடிகளையும் ஏப்பம் விட்டார். அதனை தொடர்ந்து நடிப்பு இயக்கம் என செம பிஸியாக இருந்து வருகிறார் நடிகர்.

கை கொடுக்கவில்லை

கை கொடுக்கவில்லை

அவ்வப்போது காதல், கிசு கிசு என சிக்கி வந்தாலும் காரியத்தில் கண்ணாய் இருந்து வருகிறார் நடிகர். ஆனால் என்ன நேரமோ தெரியவில்லை. நடிகர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாய் பிளாப். முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டும் நடிகருக்கு ஒன்றும் கை கொடுக்கவில்லை.

பணச்சிக்கல்

பணச்சிக்கல்

இந்நிலையில் போலீஸ் அதிகாரியின் பெயரில் ஒரு படத்தில் நடித்துள்ளார் நடிகர். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த வாரமே ரிலீஸ் ஆக வேண்டிய படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. கடைசி நேரத்தில் ஏற்பட்ட பணச்சிக்கலால் படம் ரிலீஸ் ஆகவில்லை என கூறப்பட்டது.

தெறித்து ஓடுகிறார்களாம்

தெறித்து ஓடுகிறார்களாம்

இந்நிலையில் நடிகரின் படத்தை வாங்கவே ஆள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வி கண்டதால் விநியோகஸ்தர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். இதனால்தான் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். பார்ப்போம் இந்த மாதத்திலாவது படம் திரைக்கு வருகிறதா என்று!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X