குற்றம்சாட்டிய மாமனார்.. இல்லை என பதறி மறுத்த மருமகள்.. எல்லாம் ஒல்லி நடிகரின் திருவிளையாடல்தானாம்!

Recommended Video

போதைக்கு அடிமையான நடிகை | Top Actress in Trouble | Addiction to Drinks | Web Series

சென்னை: தனது விவாகரத்து குறித்து நடிகை பதறியடித்து பேசியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

மலையாள தேசத்தை பூர்விகமாக கொண்ட அந்த நடிகை தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். வந்த வேகத்தில் அப்போதிருந்த முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களில் ஒப்பந்தமானார்.

மற்ற நடிகைகளை காட்டிலும் ஏராளமான படங்களை கைவசம் வைத்திருந்தார். இதனால் முன்னணி நட்சத்திரங்களின் வயித்தெரிச்சலையும் கொட்டிக் கொண்டார்.

இயக்குநருடன் காதல்

இயக்குநருடன் காதல்

அதோடு முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு பல மூத்த நடிகைகளின் பொறாமைக்கு ஆளானார். ஆனாலும் என் வழி தனி வழி என படங்களில் நடிக்கும் வேலையை மட்டும் பார்த்து வந்தார். அந்த நேரத்தில்தான் அந்த இளம் இயக்குநரின் அறிமுகம் கிடைத்தது. தன்னை வைத்து ஒரு சில படங்களை இயக்கிய அவருடன் காதல் கொண்டார்.

கண்டிஷன்

கண்டிஷன்

இருவரும் ஒருவரை ஒருவர் உருகி உருகி காதலித்து வந்தனர். இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரிய வர காதலர்களை அழைத்துப் பேசினர். திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது, லேட் நைட் பார்ட்டிக்கு மற்றவர்களுடன் செல்லக்கூடாது என கண்டிஷன் போட்டது மாமனார் தரப்பு. எல்லாத்துக்கும் சரி சரி என தலையாட்டினார் நடிகை.

மீண்டும் நடிக்கலாமே

மீண்டும் நடிக்கலாமே

இதனை தொடர்ந்து திருமணம் நடந்து முடிந்த இருவரின் திருமண வாழ்க்கையும் நன்றாக சென்றுகொண்டிருந்தது. அப்போது தான் ஒல்லி நடிகரின் பார்வை நடிகையின் மீது பட்டது. எதற்கு கேரியரை வீணாக்க வேண்டும் மீண்டும் நடிக்கலாமே என பிரைன் வாஷ் செய்தார் நடிகர்.

நெருக்கம் அதிகரிப்பு

நெருக்கம் அதிகரிப்பு

நடிகர் மகுடிக்கு பாம்பாய் மாறிய நடிகை கணவருடன் மல்லுக்கட்டி ஒருவழியாக விவாகரத்து பெற்றார். பின்னர் தனிக்காட்டு ராஜாவான நடிகை தன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட ஆரம்பித்தார். குறிப்பாக ஒல்லி நடிகருடனான நெருக்கம் ரொம்பவே அதிகரித்தது.

மாமனார் குற்றச்சாட்டு

மாமனார் குற்றச்சாட்டு

ஒல்லி நடிகருடன் நடித்தது போக அவரது இயக்கத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கதையில் நடித்தார் நடிகை. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகையின் முன்னாள் மாமனார், அந்த நடிகர் தான் விவாகரத்துக்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சப்பைக்கட்டு

சப்பைக்கட்டு

இதனைக் கேட்டு பதறிப் போன நடிகை, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. என் விவாகரத்துக்கு நான்தான் காரணம். அவர் மீது எந்த தவறும் இல்லை என நடிகருக்கு சப்பைக்கட்டு கட்டியுள்ளார். ஏற்கனவே ஒல்லி நடிகரையும் நடிகையையும் சேர்த்து வைத்து பல கிசுகிசுக்கள் வலைய வந்தன.

ஓவர் பிரஷராம்

ஓவர் பிரஷராம்

இந்நிலையில் நடிகை, அந்த நடிகரை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசியுள்ளார். நடிகை இப்படி பதறிப்போய் விளக்கம் கொடுத்ததற்கு காரணமும் மிஸ்டர் ஒல்லிதானாம். தன்னுடைய பெயருக்கு களங்கம் வராத வகையில் பேசி எல்லாத்தையும் சரி செய்ய வேண்டும் என ஓவர் பிரஷர் கொடுத்தாராம்.

ஓகேவான டீல்

ஓகேவான டீல்

அதோடு மீண்டும் தமது கூட்டணியிலோ அல்லது தமது தயாரிப்பிலோ கோலிவுட்டில் ஒரு பிரேக் கொடுப்பதாக டீல் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் கேட்ட நடிகை, நடந்தது நடந்து போச்சு, கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர அதிர்ஷ்டம் வாசல் கதவை தட்டுகிறது என அப்படியே ஓகே சொல்லி விட்டார் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X