ஓவர் ஐஸ்சா இருக்கேன்னு நினைச்சது சரிதானாம்.. அது வருமானவரி ஹீரோயின் நடத்திய வாய்ப்பு டெக்னிக்காம்ல!
சென்னை: அந்த இளம் ஹீரோயின் நடத்தும் வாய்ப்பு டெக்னிக் பற்றிதான் கோலிவுட்டில் அதிமாகப் பேசி வருகிறார்கள்.
திடீரென்று பிரபலமாகி இருக்கிறார், அந்த இளம் ஹீரோயின். கன்னடத்தில் இருந்து தெலுங்குக்குப் போன அந்த ஹீரோயின் மீதுதான் டாப் ஹீரோக்களுக்கு கண்.
தெலுங்கில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகிவிட்ட அந்த ஹீரோயினின் அடுத்த டார்க்கெட் தமிழ் சினிமா!

கல்யாண மண்டபம்
சமீபத்தில் நடிகையின் வீட்டில் அதிரடி ரெய்டு நடந்தது. வீட்டில் இருந்து பல கோடி ரூபாய்களை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், அவருக்கு இருக்கும் சொத்துப் பட்டியல்களை பார்த்து அசந்தே போய்விட்டார்களாம். கல்யாண மண்டபம், தேயிலை எஸ்டேட் என்று நடிகையின் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள்.

இளம் வயதில்
இந்நிலையில், அதிகாரிகளின் முன் நேரடியாக ஆஜராகி சொத்துக்களுக்கு விளக்கம் அளித்துவிட்டு வந்திருக்கிறார் நடிகை. இந்த இளம் வயதிலேயே, எப்படி இத்தனை கோடி சொத்துச் சேர்த்தார் என்று உடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கே ஆச்சரியமாம். நடிகைக்கு பின்னால் அரசியல்வாதி ஒருவர் இருப்பதாகவும் ரகசியமாக பேசிக்கொள்கிறார்கள்.

யாரை பிடித்தால்
தமிழில், கைதி நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், அந்த நடிகை. இந்தப் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது. அடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புப் பிடிக்க வேண்டும் என்பதால், காரியத்தில் இறங்கிவிட்டாராம். எப்படி, யாரை பிடித்தால் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக முடியும் என்று ரூட் போட்டு வைத்திருக்கிறாராம்.

ஆச்சரியம்
அதன்படி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் ஒரு பெரிய ஐஸ் வைத்தார் நடிகை. அதாவது தமிழில் டாப் நடிகராக இருக்கும் அந்த ஹீரோவைத்தான் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னாராம். இது பெரிய ஐஸ்சா இருக்கே என்று சினிமாக்காரர்களே ஆச்சரியமாக, அதற்கு பின்னால் வாய்ப்பு டெக்னிக் இருக்கிறதாம். அநேகமாக அந்த டாப் ஹீரோவின் அடுத்தப் படத்தில் அவர் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











