கடனில் சிக்கி தவிக்கும் பிரபல நடிகர்…தெலுங்குக்கு போக இதுதான் காரணம்!

சென்னை : பிரபல நடிகர் கடனில் சிக்கி தவிப்பதால், தெலுங்குக்கு ஒட்டம் பிடித்துள்ளதாக, சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.

பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த நடிகர். இதைத்தொடர்ந்து, அந்த தொலைக்காட்சியிலேயே பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இதில் இவருக்கு பேரும் புகழும் கிடைத்ததை அடுத்து ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Gossip: Famous actor who is stuck in debt

ஒல்லி நடிகரால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட, இந்த பிரபலம் கதாநாயகனாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். முதலில் ஒரு சில படங்களில் நடித்தார் அந்த படங்கள் பெரியஅளவில் பேசப்படவில்லை என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கதைகளை தேர்வு செய்து நடித்தார். இதனால் குழந்தைகளுக்கு பிடித்தமான ஹீரோவாக மாறிவிட்டார்.

நடிகராக இருந்த இவர் தயாரிப்பாளராகவும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் திரையரங்கில் வெளியானத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அந்த பிரபல நடிகர் நடித்திருப்பார்.

தற்போது இந்த பிரபல நடிகருக்கு தெலுங்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்ட முக்கிய காரணம் கடன் தொல்லையாம். தமிழ் தயாரிப்பாளர்கள் சிலரால் இவருக்கு கடன் அதிகரித்துவிட்டதாம். இதனால் சொந்தமாக திரைப்படங்களை தயாரிக்கக்கூடிய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைய திட்டமிட்டுள்ளார். கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்கவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X