தன்பாலின ஈர்ப்பாளரான தமிழ் நடிகை?.. அய்யய்யோ அம்மணி ரூட் வேற மாதிரி போகுதே.. அதிர்ச்சியில் கோலிவுட்

By Staff

சென்னை: தமிழில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருந்தவர் அவர். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனையடுத்து பாடல்களுக்கு நடனமாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அந்த சான்ஸுகளும் சறுக்கிவிட; இப்போது சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அந்த நடிகை குறித்து கோலிவுட்டில் ஒரு விஷயம் கிசுகிசுக்கப்படுகிறது.

சுந்தர மொழி திரையுலகில் அறிமுகமானவர்தான் பூனை நடிகை. வட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவருக்கு கல்லூரி காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது ஆசையாக இருந்தது. அதற்காக அவர் தீவிரமாக தேடலும் கொண்டார். ஆனால் பாலிவுட் திரையுலகம் அம்மணிக்கு கதவை திறந்துவிடவில்லை. ஆனாலும் எப்படியாவது மற்ற மொழியிலாவது நடிகையாகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தென் மாநிலத்தை நோக்கி பயணத்தை கட்டினார் அவர்.

அறிமுகமான நடிகை: அதன்படி முதலில் தெலுங்கில் அறிமுகமானார் அம்மணி. முதல் படம் அவருக்கு ஓரளவுக்கு வெளிச்சத்தை கொடுத்ததால் அறிமுகமான ஆண்டிலேயே இன்னொரு பட வாய்ப்பும் கிடைத்தது. இதனால் அவர் உச்சக்கட்ட சந்தோஷம் அடைந்தார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்திலும் அம்மணிக்கு வாய்ப்பு கிடைக்க; அட அறிமுகமான சில காலத்திலேயே இரண்டு மொழிகளில் நடிக்கிறோமே என்று பூரித்துதான் போனார் அவர். ஆனால் வாய்ப்புகள் எதுவும் சரளமாக கிடைக்கவில்லை.

Gossip has it that a famous actress from Tamil cinema has turned LGBTQ

தமிழில் அறிமுகம்: மூன்றாவதாக தமிழில் அறிமுகமானார். அந்த இரண்டு மொழி திரையுலகம் போல இங்கும் அவருக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவருக்கு; ஒருகட்டத்தில் கோலிவுட்டில் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன. இப்படிப்பட்ட நிலைமையில் கடவுளின் தேசத்தில் அவருக்கு திரை வாய்ப்பு கிடைக்க அங்கு சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாமர் பயணம்: எந்தப் பக்கம் திரும்பினாலும் வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக அம்மணி தனது பயணத்தை வேறு பாதையில் திருப்பினார். அதாவது கிளாமர் பாதையில் கவனத்தை செலுத்த தமிழில் சில படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆடினார். அதனைப் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். என்னது இது நம்ம பூனை நடிகையா இவங்க என்று வாயை பிளந்து பார்த்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ அந்தப் பயணமும் நினைத்தபடி ஜோராக நடக்கவில்லை.

வேற ரூட்டில் நடிகை?: சூழல் இப்படி இருக்க தனது சமூக வலைதள பக்கத்தில் கிளாமர் ஃபோட்டோக்களை போட்டு ரசிகர்களை தினமும் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார் அவர். அவர் பகிரும் புகைப்படங்களை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதுமட்டுமின்றி நடிகைக்கு வாய்ப்புகள் கொடுத்தால் என்ன என்ற குரல்களையும் அந்தப் புகைப்பட ரசிகர்கள் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் அம்மணி பற்றி புதிய கிசுகிசு ஓட ஆரம்பித்திருக்கிறது.

அதாவது, முதலில் அவர் ஒருவரை காதலித்தாராம். ஆனால் அந்தக் காதலர் நடிகையின் அழகை அனுபவித்துவிட்டு ஓட்டம் எடுத்தாராம். இது ஒருபக்கம் இருக்க அம்மணியை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார். அதனை இத்தனை வருடங்கள் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்த அவர்; தன்னுடைய ஆண் காதலர் ஓடியதை அடுத்து இனி ஆண்களை நம்பி பிரோயஜனம் இல்லை என்று முடிவு செய்து; தன்னை போலவே இருக்கும் தன்பாலின ஈர்ப்பில் ஆர்வம் இருக்கும் ஒரு பெண்ணை பிடித்து அவருடன் இப்போது ஒரே வீட்டில் வாழ்ந்துவருகிறாராம். இதனை கவனித்த திரைத்துறையினரோ அட பூனை நடிகை இந்த ரூட்டில் போக ஆரம்பிச்சிட்டாரே என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X