நடிகர் மீது நம்பிக்கை துரோகி புகார்! இயக்குநருக்காக முடிவை மாற்றிய படிப்ஸ் நடிகை .. கோலிவுட் பின்னணி
சென்னை: லையாளத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த அந்த 'படிப்ஸ்' நடிகை, தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே எடிட்டிங் விவகாரத்தில் ஒரு முன்னணி நடிகருடன் மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது அதே நடிகருடன் மீண்டும் ஜோடி சேருவது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.
படிப்ஸ் நடிகையின் நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றால் நடிகையின் நடிப்பு நின்னு பேசும் என்று கூறும் அளவுக்கு நடிகையின் பர்ஃபாமன்ஸ் இருக்கும். அப்படியான நடிகை சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த ஒரு தீர்க்கமான முடிவை தனக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த இயக்குநர் கேட்டுக் கொண்டதால் தான் எடுத்த தீர்க்கமான முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
அதாவது தமிழில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவர் மனதில் இருப்பது இவர் இருக்கும் ஃபிரேமில் இவர்தான் நடிப்பில் ஹைலைட்டாக தெரியவேண்டும். இதனால் தனது சொல்லை கேட்டு முடிவு எடுக்கும் இயக்குநர்கள் இருந்தால் படத்தின் எடிட்டிங்கில் நடிகரின் தலையீடும் இருக்குமாம். இப்படி நடிகர் தலையிட்டு நாசமாக்கிய ஒரு படத்தில் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த படிப்ஸ் நடிகை.

ஷாக் ஆன நடிகை: நடிகரின் தலையீடு இப்படி எடிட்டிங்கில் இருக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகைக்கு படம் வெளியான பின்னர் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதனால் செம அப்செட் ஆகி, நடிகரிடம் எந்தவிதமான சண்டையும் போடாமல் இயக்குநரிடம் காட்டு கத்து கத்தி உள்ளார். குறிப்பாக நான் உயிரைக் கொடுத்து நடித்த காட்சிகள் எல்லாம் இல்லவே இல்லை. நான் என்ன இந்த படத்தில் பிராப்பர்ட்டியா என்று கோபமாக கேட்டுள்ளார்.
உச்சகட்ட கோபம்: இதனால் வேறு வழி இல்லாமல் நடிகரின் தலையீடு இருந்ததைச் சொல்லவே, படத்துக்கு நீ இயக்குநரா அந்த நடிகரா? எனக்கு கதை சொன்னது நீயா? இல்லை அந்த நடிகரா என்று கோபமாக கேட்டுள்ளார். இருப்பினும் நடிகரிடம் இது குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. அதன் பின்னர் நடிகரிடமும் பேசுவது இல்லையாம். மேலும் அந்த நடிகர் படத்தில் இனிமேல் நடிக்கவே கூடாது என்று எல்லாம் முடிவெடுத்துள்ளார்.
தீர்க்கமான முடிவு: நடிகரும் அவரது முந்தைய சில படங்களுக்கு நடிகைக்கு கொக்கி போட்டு பார்த்துள்ளார். நடிகையோ கொஞ்சம் கூட மதிக்கவில்லையாம். இப்படி இருக்க நடிகை கடைசியாக நடித்த படத்தின் இயக்குநர் படத்தில் நடிகர் இப்போது கமிட் ஆகி உள்ளார். அப்போது, ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் படிப்ஸ் நடிகையை நடிக்க வைக்கலாம் என்று நடிகரும் இயக்குநரும் முடிவெடுத்துள்ளார்கள்.
இயக்குநருக்காக: இயக்குநரும் நம்பிக்கையுடன் நடிகையிடம் போய் கதையைச் சொல்லி, அவர்தான் நடிகர் என்றும் கூறியுள்ளார். நடிகையோ முடியாது என்று மறுத்துள்ளார். உடனே இயக்குநர் கோரிக்கையாக கேட்க, தனக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த இயக்குநரை கெஞ்ச வைப்பது சரி இல்லை, எனவே படத்தில் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். இயக்குநரிடமோ, நான் உங்களுக்காகத்தான் நடிக்கிறேன். உங்களுக்காக மட்டும் தான். அந்த நடிகர் ஒரு சரியான நம்பிக்கை துரோகி என்று உறுதியாகச் சொல்லி உள்ளார். இப்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications











